பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. பகுத்தறிவு விஞ்ஞான அடிப்படையில் ஆராய்கிற இந்தக் கட்டுரை சித்தனையைத் துரண்டுகிறது. 'உலகப்படைப்புக் கதைகள்-கதை மூலங்களைப் பற்றி ஒர் ஆய்வு என்னும் கட்டுரை, உலகம் எப்படி படைக்கப் பட்டது என்பதுபற்றி பழங்கால மனிதரின் நம்பிக்கைகளும் கதைகளும் தோன்றின விதத்தை ஆராய்ந்து கூறுகிறது. ஆதியில் உலகத்தைப் படைத்தவள் தாய்தான் என்னும் தம்பிக்கை கொண்டு அவளைப் பற்றி அக்காலத்து மனிதர் கற்பித்துக்கொண்ட கதைகளையும், ஆதியில் உலகத்தைப் படைத்தவன் தந்தைதான் என்னும் நம்பிக்கையோடு அவனேப் பற்றி அக்காலத்து மனிதர் கற்பித்துக்கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இக்கொள்கை கனேப் பற்றிப் பழைய எகிப்து நாட்டுக்கதைகளும் நம்பிக்கை களும், பாபிலோனிய-ககேரிய நாட்டு நம்பிக்கைகளும் கதை களும் கிரேக்க-யூதர்களின் நம்பிக்கைகளும் கதைகளும், இந்திய தேசத்துப் பழைய நம்பிக்கைகளும் கதைகளும் இதில் ஆராயப்படுகின்றன. இந்நூலின் இரண்டாம் பகுதியாகிய தத்துவம்’ என் னும் பகுதியில் கீழ்க்கண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘மணிமேகலையின் பெளத்தம், பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்’, ‘பரடக்க லோகாயதம்: என்னும் பொருள் பற்றி மூன்று விஷயங்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. மணிமேகலையின் பெளத்தம் என்னும் கட்டுரையில், மணிமேகலை காவியத்தில் சொல்லப்படுகிற பெளத்தமதக் கொள்கையைப் பற்றிக் கட்டுரையாசிரியர் ஆராய்கிரு.ர். எனயான (தேரவாத) பெளத்தத்திலிருந்து மகாயான பெளத்தம் பிரிந்ததையும் மகாயானத்திலிருந்து மாத்ய மிகம், யோகாசாரம் முதலான வேறு பெளத்த மதப்பிரிவுகள் தோன்றியதையும் கட்டுரையாசிரியர் கூறுகிருர், மணிமேகலை காவியத்தில் கூறப்படுகிற அறுவகைச் சமய தத்துவங்களே