பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலில் முருகன் ஒரு குறிப்பிட்ட சக்தியுடையவனாக, அதாவது பிணி தீர்க்கும் சக்தியுடையவளுகக் கருதப் பட்டான். இதல்ை இனக்குழு வாழ்க்கையில் அவன் வேலன் மூலம் தன் சக்தியை வெளிப்படுத்தினன். குழுக்கள் இணைந்த காலத்தில் அவன் கொற்றவை என்ற வேட்டைத் தெய்வத் தின் மகனுக வேட்டைத் தொழிலுக்கும், போர்த் தொழிலுக்கும் தலைவனஞன். இவை யாவும் மலேச்சாரல் வாழ்க்கையில் தமிழ் மக்களிடத்து எழுந்த நம்பிக்கைகள், குழு வாழ்க்கை அழிந்து சிறு நாடுகள் தோன்றின. இவை குழுக் கூட்டமைப்புக்களே. குழுக்களில் காணப்பட்ட மர வணக்கமும், விலங்கு வணக்கமும், எச்சங்களாக இப்புது சமுதாயத்தில் நின்றன. இதளுேடு முருகன் என்ற சக்தியை அவர்கள் மரத்திலும் விலங்குருவத்திலும் வழிபட்டனர். இனக் குழு மக்களின் பொதுக் கூட்டமைப்புக்கள், அரசாக இணைகிற பொழுது, வடநாட்டுப் புராணக் கதைகளும். தமிழ் நாட்டுக் குழு நம்பிக்கைகளின் எச்சங் களும் கலந்து முருகன் என்ற கலப்புருவக் கடவுளே தமிழ் மக்கள் தோற்றுவித்தார்கள். இவனே திருப்பரங்குன்ற முருகன். இப்பொழுது அவன் அரசன் வணங்கும் த்ெய்வமாகி விட்டான். செல்வர்களும் வறியவர்களும் அவனை வணங்கினர்கள். ஒவ்வொரு பகுதி மக்கள் வணங்கப்படும் தெய்வமாக முருகன் இருந்தபொழுது ஒவ்வொர் சக்தியுடையவகை அவன் கருதப்பட்டான். வணங்கிய மக்கள் சக்தி 1. வேட்டையாடும் வேட்டைத் தெய்வம் :க்ேகள் நோய் தீர்க்கும் சக்தி 2. குறிஞ்சி நில மகளிர் காதலரைச் சேர்த்து வைக்கும் சக்தி 3. குறிஞ்சி நில மக்கள் போர்த் தெய்வம் வெட்சிப் போர்களில் கொற்றவை சிறுவன் ஈடுபடும்பொழுது § 6