பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பெரியக் இனக் குழுக் காதல் தெய்வம் கூட்டமைப்புக்கள் போர்த் தெய்வம் வரம் தரு தெய்வம் 5. பண்பாட்டுக் ஆண் தெய்வத்தின் கலப்புக் காலம் மகன். சிவ குமாரன், பழைய சக்திகள் அனைத்தும் உண்டு. எல்லா வகைப் போட் 'டிகளிலும் வெற்றி தருபவன். முக்கிய மாகப் போர்க் கடவுள். 6. திருப்பரங்குன்றக் எல்லா மக்களுக்கும் கோயில் தோன்றிய தெய்வம். அரசனுக் கர்வம். - கும் தெய்வம். அவன் எல்லா வரங்களும் அருளும் சக்தியுடை பவுன். இத்தகைய சக்திகள், வரலாற்று மாற்றங்களுக்கு ஏற்றபடி முருகனுக்கு வழிபடுவோரால் ஏற்றிக் கூறப் பட்டன. 4, 5, 6 வது காலங்களில் தோன்றிய பாடல்களே பரிபாடல். அதிலும் 4, 5வது காலத்துச் சிந்தனைகளே மிகப்பெரும் பான்மையாக இப்பாடல்களில் உள்ளன. 6வது காலச்சிந்தனை குறைவாகவே காணப்படுகிறது. இச்சிந்தனை வருமாறு: எல்லாச் சக்திகளும் உடைய முருகனிடம், பொருளையோ, இன்பத்தையோ, புகழையோ கேட்கவேண்டாம். அவன் அருளேயும் அன்பையும் பெற்று அவன் காட்டிய வழியில் அறம் செய்தால், நாம் கேளாமலேயே அவன் நமது விருப்பங்களையெல்லாம் நிறைவு செய்வான். இச்சிந்தனை அடிப்படைத் தேவைகளான உணவும், உடையும், உறையுளும் நிறைவானவர்களுக்கே தோன்றும். அவர்களிடம் பொருள் இருப்பதால், போகமும் 57