பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழும் எளிதில் கிடைக்கும். எனவே தான் இரண்டொரு பாடல்களில் புலவர்கள். 'பொருளும் போகமும் புகழும் வேண்டா அருளும் அன்பும் அறனும் குளு *... வேண்டுமென்அ பாடுகிரு.ர்கள். இவை தவிர உலக இன்பங்கள் பொய்யானவை என்று கருத்தோ, வேறுலகில் இன்பமிருக்கிறதென்று எண்ணியோ இவ்வுலக ஆசையை வெறுத்து, அவ்வுலகத்துக்குப் போக வரம் கேட்கும் வேண்டுகோளோ பரிபாடற் காலத்தில் தோன்றவில்லை. பொருளும், போகமும் அரசருக்கும் செல்வருக்கும்தாம் பிறருக்கு வறுமையும் துன்பமும் என்ற நிலை இன்னும் தோன்றவில்லை. அரசரும் செல்வரும் செல்வத்தில் திளைத் தனர். ஏழை எளியவரும் இருந்தனர். ஆனல் இந்த ஏற்றத்தாழ்வு அதற்குப் பின்னுள்ள காலத்தில் உள்ளது போல் பரிபாடற் காலத்தில் மிகுதியாக இருக்கவில்லை. மேலும், இனக்குழுவில் சமமானவர்களாகவும், சகோதரர் களாகவும் வாழ்ந்த நினைவு இன்னும் சமூகத்தின் அடி நிலை களில் வாழ்ந்தவர்கள் மனத்தி கிருந்து அழியவில்லை. எனவே அவர்களிடையே வாழ்க்கையே துன்பம், பொய்யானது. அதில் இன்பத்தை நாடக்கூடாது' என்ற சிந்தனையும், பேரின்பம் வேறுலகத்தில் உள்ளது என்ற கற்பனையும் அப்பொழுது தோன்றவில்லை.