பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைகளின் தோற்றம்


[கலைகள் மனிதனுடைய அழகுணர்ச்சியின் வெளிப்பாடாக எழுந்தன என்று கலைஞர்கள் கூறுகின்றனர். கலைகளின் தோற்றக்காலத்தை ஆராய்ந்து அவை எக்காரணத்தால் எழுந்தன் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
இக்கட்டுரையில் வரலாற்று முற்காலத் தொல்பொருள் சான்றுகளையும், தற்கால மானிடவியல் சான்றுகளை ஒப்பிட்டு ஆராய்ந்து, நவீன ஒப்பியல் முறையைப் பின்பற்றி முடிவுகளுக்கு வந்துள்ளேன். ஆ-ர்.]

“கலைகள் எப்பொழுது தோன்றின? மனிதன் தோன்றிய போதே, கலைகளும் தோன்றின. கலைகளே மனிதனை விலங்கினின்றும் பிரிக்கின்றன என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். சில இலக்கிய ரசிகர்கள் இலக்கியமே மனிதன் படைத்த முதற்கலை, அதுவே கலைகளின் தாய் என்றும் கூறுகிறார்கள்.

அகழ்வாராய்ச்சியும், மானிடவியல் ஆராய்சிகளும் மானிட இனத்தின் வரலாற்றையும் அவனது பண்பாட்டின் வரலாற்றையும் அறியப் பல சான்றுகளை இந்நூற்றாண்டில் அளித்துள்ளன.

கற்கால மனிதன் மனிதக் குரங்கினத்திலிருந்து பிரிந்து புதிய இனமாக உருவாகத் தொடங்கிய காலம் சுமார் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரேயாம். உலகில் பல நாடுகளில் 'ஹோமோ ஸேபியன்ஸ்' என்ற பண்டைக் கால மனிதனின் எலும்புக் கூடுகளும், அவனது கற்கருவிகளும் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து அவன் தனது உணவைப்

59