பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற இக்கற் கருவிகளைப் பயன்படுத்தினான் என்பதும், உணவு பெறுவதே அவனது முக்கிய சிந்தனையாக இருந்ததென்பதும் புலனாகிறது. அப்பொழுது அவன் இயற்கைச் சக்திகளுக்கு அடிமையாக இருந்தான். இயற்கையின் சக்திகளான, தீ, காற்று, நீர், முதலியவைவும், கொடூர விலங்குகளும் அவனது நல்வாழ்க்கைக்கு விரோதமாக இருந்தன. அவைகளைக் கண்டு அஞ்சி, அவற்றின் கொடூர சக்திக்குத் தப்பி உணவு தேடி வாழ்வதையே அவன் தனது எண்ணமாகக் கொண்டிருந்தான். அவன் கலை எதனையும் படைக்கவில்லை. அவன் மொழியைக் கூடத் தோற்றுவிக்கவில்லை. எனவே மனிதன், மனிதப் பண்புகளோடு உருவான காலத்தில், கலையும், மொழியும் தோன்றின. மனிதனது உறுப்புக்களும், மூளையும், இன்றைய மனிதனது உறுப்புக்களும், மூளையையும் போலவே வளர்ச்சியடைந்த காலம் சுமார் 60,000 ஆண்டுகளாக இருக்கலாம் என்று சோவியத் அகழ் வாராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

மனிதன் தோன்றிய காலத்தில் மந்தைகளாக, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஒன்று சேர்ந்து பின் பிரிந்து விடுவர். சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் கூட்டம், இணைந்து நிலையாக ஒன்றுபட்டு, உணவு தேடலில் ஈடுபட்டது. ஒன்றுபட்டு வேட்டையாடிற்று. ஒன்றுபட்டு மலை வேளாண்மை செய்தது.

அதற்கு முன்னர் தம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தில், தனது ஆற்றலை அதிகரித்துக் கொள்ளப் பல நம்பிக்கைகளை மக்கள் உருவாக்கினார்கள். பல பண்பாட்டு நிலைகளிலுள்ள மக்கள் குறிப்பிட்ட நம்பிக்கைகளை உடையவர்களாயிருந்தனர்.

வேட்டையாடும் மக்களின் சிந்தனைகளும் நம்பிக்கை களும் விலங்குகளைப் பற்றியே இருத்தல் இயல்பு. இவர்களது புதை குழிகளிலும், இருப்பிடத் தலங்களிலும் பல விலங்குருவப் படிவங்கள் கிடைக்கின்றன. கற்கால பூனிதர்கள் வாழ்ந்த குகைகளில், காண்டாமிருகம், மாம்மத்

60