பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ற யானை போன்றதோர் உருவம் வரையப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை வரலாற்று முற்கால மக்களின் ஆரம்பக் கலை முயற்சிகள் மேலும் வளர்ச்சியுற்றுப் பண்டைய நாகரிகம் தோன்றிய காலத்தில் பல சிற்பம் உருவங்களை மக்கள் படைத்தனர். இவை எகிப்து, அசிரியா, பாபிலோன் , இந்தியா, மெக்ஸிகோ முதலியவிடங்களில் கிடைக்கின்றன. எகிப்தில் கழுகு - மனித உருவமும், ஆண் தலையும், சிங்க உடலும் உள்ள உருவமும், அசிரியா, பாபிலோன் நாடுகளில் காளைமாட்டு உடலும் மனிதத் தலையும், இறகுகளும் உள்ள உருவங்களும், இந்தியாவில் நரசிம்மன், விநாயகன், மச்சாவதாரம், கூர்மாவதாரம் போன்ற சிற்பம் உருவங்களும் மெக்ஸிகோவில் புலி - மானிட உருவமும் இரண்டாவது கால கட்டத்தின் படைப்புகளாகக் கிடைத்துள்ளன.

மூன்றாவது கால கட்டத்தில் மனித உருவங்களும், மிகைப்படுத்தப்பட்ட மனித உருவத்தில் தெய்வங்களும் சிற்பங்களாகப் படைக்கப்பட்டன.

எனவே மனிதனது படைப்புக்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் சிற்பக் கலையின் வளர்ச்சியை நான்கு கட்டங்களாகக் குறிப்பிடலாம்.

1. விலங்குருவப் படைப்புக் காலம்
2. மனித விலங்குருவப் படைப்புக் காலம்.
3. மனித உருவப் படைப்புக் காலம்.
4. தெய்வ உருவப் படைப்புக் காலம்.

இக்கால கட்டங்களில் முதலாவது, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தது. இரண்டாவது கட்டம், வரலாற்றின் தோற்ற காலம். மூன்றாவதும் நான்காவதும் வரலாற்றுக் காலங்கள்.

முதற்காலகட்டக் கலையைப் பற்றி அறிய அதனைப் படைத்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

61