பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்காலக்கட்டத்தில் விலங்குருவங்களை அவர்கள் படைத்தார்கள் என்பது நமக்கு அகழ்வாராய்ச்சிகள் அறிவிக்கின்றன. ஏன் அவர்கள் விலங்குருவங்களைப் படைத்தார்கள் என்பதற்கு விடை காண அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் பயன்படா. அதனையறிய - மானிடவியல் சான்றுகளைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் முதல் கட்டத்தில் சிற்பங்களைப் படைத்தவர்கள் வாழ்ந்த சமுதாயச் சூழ்நிலையிலும், பண்பாட்டு வளர்ச்சி நிலையிலும் வாழ்கிற இனக்குழு மக்கள் உள்ளார். சமமான சூழ்நிலைகள் சமமான சிந்தனைகளைத் தோற்றுவிக்கும். அது மட்டுமின்றி முற்கால மக்களைப் போலவே தமது வாழ்க்கையில் விலங்குகளுக்கு முக்கியத்துவமளிக்கும் மக்கள் உள்ளனர். அவர்களது நம்பிக்கைகளை ஆராய்ந்து, முற்கால மக்களின் நம்பிக்கைகள் எவையென அனுமானிக்கலாம். வேட்டை வாழ்க்கையை முற்றிலும் கைகள் உழவுத்தொழிலால் உணவு பெற்று வாழும் மக்கள்ளினத்தவரிடையே கூட, வேட்டைக்கால நம்பிக்கைகளின் எச்சங்கள் உள்ளன. அவை எச்சங்களென்று துணிந்தால், முற்கால வாழ்க்கையின் நம்பிக்கைகளை அனுமானிக்கலாம். இவ்வாறு தற்கால் இனக்குழு மக்களின் நம்பிக்கைகளைச் சான்றுக்காகக் கொண்டு வரலாற்று முற்கால மக்களின் நம்பிக்கைகளை ஊகம் செய்யலாம். இரண்டு ஆய்வுத்துறைகளின் ஒப்பியல் ஆய்வுகளால் கலையின் தோற்ற காலநிலைமையையும், எவ்விதச் சிந்தனைகள், நம்பிக்கைகளால் ஆரம்ப காலக் கலை பாதிக்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

இரண்டாவது காலகட்டக் கலையைப் பற்றி அறிய அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும், மானிடவியல் சான்றுகளும் புராணக் கதைகளும் உள்ளன. அவற்றை வரலாற்று ரீதியாக வரிசைப்படுத்தி இக்கலையின் தன்மையை அறியலாம்.

மூன்றாவது நான்காவது கால கட்டங்களைப் பற்றி அறிய , அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் புராணக் கதைகளும்

62