பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இட்டுள்ள பெயர். இது போலவே சீனாவிலும் , ஜாவாவிலும் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அவற்றை பீகிங் மனிதன், ஜாவா மனிதன் என்றழைக்கிறார்கள்.

இவை கிடைத்த புதைவிடங்களில் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்தன. ஜியோமிதி வடிவில் அரைகுறையாகச் செதுக்கப்பட்ட கற்கள்தாம் அவை. உலோகக் கருவிகளோ பொருள்களோ கிடைக்கவில்லை. இவை தவிர விலங்கு உருவக் கற்களோ, மனித உருவக் கற்களோ கிடைக்கவில்லை. மனிதன் முதலில் கலையைப் படைக்கவில்லை. தான் வாழ்வதற்குத் தேவையான கருவிகளைத்தான் படைத்தான். அதற்கு முன் இயற்கைச் சக்திகளோடு போராடி உணவு மட்டும் பெற்றான். இருப்பிடம் கூடக் குகைகளாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எலும்புக் கூடுகள் அகப்பட்ட இடங்களுக்குப் பக்கத்தில் மனிதன் வசித்த குகைகள் காணப்படுகின்றான். அவனுக்கு உடைகள் அநேகமாக எதுவும் இல்லை. சில சமயம் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோலை அணிந்திருந்தான்.

இம்மனிதர்களின் வாழ்க்கையில், அவர்களுடைய வாழ்க்கை முறைக்கேற்ற கருத்துக்களும் நம்பிக்கைகளும் தோன்றியிருக்க வேண்டும். அவை கல், கற்கருவிகள், இயற்கைச் சூழல், வேட்டை வாழ்க்கை இவற்றைச் சுற்றியே சுழன்றிருக்க வேண்டும். ஆனால் அவை எவை என்பதையறிய நமக்குச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை போன்றதோர் வாழ்கையை வாழும் மக்கள் இக்காலத்தில் இல்லை. இனக்குழு மக்கள் கூட, முற்றிலும் கற்கருவிகளைப் பயன்படுத்தும் வாழ்க்கையினின்றும் முன்னேறி இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தி வாழ்கின்றனர். கடுமையான இயற்கைச் சூழ்நிலையை எதிர்த்துப் போராடிய கற்கால மக்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளில் அந்நிலையினின்றும் மிக மெதுவாக முன்னேறினர். அவர்கள் “நாம் எப்படித் தோன்றினோம்

65