பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்கிருர். பெளத்தமதத் தத்துவங்களே எழுதிய நியாயப் பிரவேசம் என்னும் தத்துவ நூலைப்பற்றியும் பேசுகிரு.ர். நாகார்ச்சுனருக்கு முன்பு பெளத்த தத்துவ நூல்கள் இருந் தன என்பதும் அந்தப் பழைய நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு நாகார்ச்சுனர் தமது நியாயப் பிரவேச நூலை எழுதினர் என்பதும் ஆராய்ந்து முடிவுசெய்யவேண்டிய விஷயம். இது இன்னும் ஆராய்ச்சியில் இருக்கிறது. நாகார்ச்சுனர் எழுதிய நியாயப் பிரவேசந்தான் பெளத்த மதத்தின் முதல் தத்துவ நூல் என்று கட்டுரையாசிரியர் இக் கட்டுரையை முடிக்கிருர், - - "பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள்’ என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வட நாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களே எழுதியுள்ளனர். ஆனல் தென்னுட்டு உலகாயதக் கொள்கையை இதுவுரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை. திரு நா. வானமாமலே அவர்கள், தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களே இக்கட்டுரையில் ஆராய் கிருர், தமிழிலுள்ள புறப்பாடல்கள், மணிமேகலை காவியம், நீலகேசி ஆகிய நூல்களைக்கொண்டு இப்பொருள் பற்றி ஆராய் கிருர், மார்க்ஸ், எங்கல்ஸ் என்பவர்களுடைய கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்நாட்டு உலகாயதக் கொள் கையை ஆய்ந்துள்ளார். பரபக்கலோகாயதம்' என்னும் கட்டுரை இந்நூலின் கடைசி கட்டுரையாகும். மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் என்னும் மூன்று தமிழ் நூல்களே ஆதாரமாகக் கொண்டு இந்தப் பொருளைப்பற்றி ஆய்வு செய்கிருர். தமிழ் நாட்டு லோகாயதம் மேலும் ஆராயப்படுதல் வேண்டும் என்று முடிக்கிரு.ர். உலகாயதக் கொள்கையைப் பற்றிய இந்த இரண்டு கட்டுரைகளும் ஆராய்ச்சி மனப்பான்பை யுள்ளவருக்குப் பெரிதும் பயன்படுவனவாகும். 3