பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழு மக்களிடையே நிலைபெற்றிருக்கின்றன. அமெரிக்காவில் சிவப்பு இந்தியரிடையேயும், ஆப்பிரிக்காவில் பல இனக்குழு மக்களிடையேயும் இந்த நம்பிக்கை பரவலாக நிலைபெற்றிருக் கிறது. இந்தியாவில் மிகப் பல இனக்குழுக்கள் விலங்குகளையோ, செடிகளையோ புனிதமாகக் கருதி, அவற்றை உண்பது பற்றி பல தடைகளைக் கையாளுகிறார்கள்.

குலக் குறியுடைய இனக்குழுக்கள், நாகரிகத்தின் துவக்க நிலையில் இருக்கிறார்கள். காய்கனிகள் தானியங்களைப் பொறுக்கிச் சேகரிப்பது, வேட்டையாடுவது அல்லது புராதன விவசாயம் முதலிய முறைகளில் தங்களது உணவைப் பெறுகிறார்கள். இவற்றினால் அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. இயற்கைச் சக்திகளை வென்று, தங்கள் உணவு பற்பத்திக்குப் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் கருவிகள் இல்லை. எனவே ஆற்றலும் இல்லை. கருவிகளைப் புனைந்து கொள்ளும் விஞ்ஞான அறிவும் தோன்றவில்லை. தானியத்தையும், விலங்குகளையும் தேடி அலையும் மக்கள் குழுக்களின் வாழ்க்கையில் விலங்குகளும், செடி கொடிகளும் மரங்களும், முக்கியத்துவம் பெறுவதில் வியப்பில்லை. அவர்களுடைய சிந்தனைகள் இவற்றைச் சுற்றிச் சுழல்கின்றன. இதிலிருந்துதான் சில நம்பிக்கைகள் பிறக்கின்றன. சக்திமிக்க சில விலங்குகளோடு தாங்கள் தொடர்புடையவர்களானால் தங்களுக்கு வேட்டையாடும் சக்தி மிகுதிப்படும் என்று நம்பி சில குழுக்கள் கரடி, புலி, சிங்கம், காண்டாமிருகம், யானை முதலியவற்றிலிருந்து தாங்கள் தோன்றியவர்கள் என்று நம்பினார்கள். ஒரு விலங்கைக் கொல்லாமல் விட்டுவிட்டால் அது வேட்டையில் துணைசெய்யும் என்று நம்பினார்கள். வலிமையுடைய விலங்குகளையும், கொல்லாமல் தவிர்க்கும் விலங்குகளையும் தமது குலக்குறியாகக் கொண்டார்கள்.

மீனைப்போல் தங்கள் குலம் பெருக வேண்டும் என்பதற்காக மீனைக் குலக்குறியாக கொண்டார்கள். பொதுவாக ஒரு விலங்கு ஏதாவது ஓர் ஆற்றலைக் கொண்டிருந்தால்

68