பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படைப்பு. அது குலக்குறி நம்பிக்கையின் புற வடிவம். ஆம் கதைத்துக் கிடக்கும் மிருகத்தைக் கற்கால மனிதன் வரைந்திருக்க முடியாது. ஏனெனில் கல்முனை அம்பு விலங்கின் உடம்பில் தைக்காது. இது வெண்கலம், அல்லது இரும்பால் ஆன் அம்பு முனையாகத்தான் இருத்தல் வேண்டும், அப்படி போனால் கலப்புக் கற்காலத்தில் (Chaloclythic) இவை வரையப்பட்டிருக்கலாம். இது ஒரு வேட்டைக் காட்சியாகும். குலக்குறி விலங்கின் ஆற்றல் அம்பு எய்யும் மனிதன் கையில் ஏறி, அம்பை விடுவித்து விலங்கைக் கொல்லுகிறது என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். இத்தகைய நம்பிக்கை இனக்குழு மக்களிடையே இன்றும் உள்ளது. இத்தொடர்பைக் காட்ட கலப்புக் கற்கால மனிதன் இச்சித்திரத்தை வரைந்தான்.

உலோகக் கருவிகளைப் பயன்படுத்தும் முன்பே மனிதன் கல்லினாலேயே சிறு கத்திகள், தோண்டக் கூடிய கருவிகள், பிளேடுகள், ஊசிகள் முதலியனவற்றைச் செய்யக் கற்றுக் காத்தான். இவை புதிய கற்காலக் கருவிகள், இவற்றின் மூலம், தான் கொன்ற விலங்கின் கொம்பு அல்லது எலும்பில் உருவங்களைச் செதுக்கினான். மத்திய அரிக்னேஷியன் காலத்தில் ‘எல்க்’ என்ற மானின் உருவத்தைக் கொம்பில் குகை மனிதன் செதுக்கியிருக்கிறான்.

இவையாவும் விலங்குலகில் அரிக்னேஷியன் மக்டலேனியன் காலத்து மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. வலிமையாக விலங்குகளை மட்டுமல்லாமல், தமக்கு இரையாகக் கூடிய ஒரு விலங்கைக் குலக்குறியாகக் கொண்டால் அதுவே தனக்கு இரையாக வருமென்று மனிதன் நினைத்திருக்கலாம். அல்லது அதனை விலக்கிவிட்டால் பிற விலங்குகளை வேட்டையாட அது துணைசெய்யும் என்றும் நம்பியிருக்கலாம். இனக்குழு மக்கள் இன்றும் இவ்வாறு நம்புகிறார்கள். அதுபோலவே வரலாற்று முற்கால மக்களும் நம்பியிருத்தல் கூடும்.

70