பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல் பெறக் குலக்குறி விலங்கை நம்புவது போலவே, குழுவின் ஆற்றலில் தான் தன்னுடைய ஆற்றல் அடங்கி யிருப்பதாகக் கருதி, குழுவோடு தனது ஒற்றுமையை வலுப் படுத்திக் கொள்ள, ஒவ்வொரு முறையும் வேட்டைக்குக் செல்லும் முன்னால், தற்கால் இனக்குழு மக்கள் நடனமாடு கிறார்கள். ஆப்பிரிக்கா, சிவப்பு இந்தியர்கள், மெலனீசியா இந்தியா, ஆகிய பகுதிகளில் வசிக்கும் இனக்குழு மக்கள் நடனமாடுகிறார்கள். பெரும்பாலும் வேட்டையின் செயல் களை அவர்கள் கலையுருவமாக்கி ஆடுகிறார்கள். மிகப் பழைய இசைக் கருவிகள் தோல் கருவிகளே, அவை வேடர்களது இசைக் கருவிகள், மூங்கில் குழாய்களாலான துளைக் கருவிகளும், நாணலான கருவிகளும் பின்னர் தோன்றின. இவை நடனத்திற்குப் பின்னணியாக ஒலியை இசைக்கவே பயன்பட்டன. இவையனைத்தும் குழு உணர்வை வலுப்படுத்தும் பனை விளைவித்தன. அக் காலத்தில் மொழியாலான பாடல்கள் இருக்கவில்லை.

முற்கால மக்கள் ஆடிய ஆடல்கள் எப்படியிருந்திருக்க வேண்டும் என்பதையறிய இன்றைய இனக்குழு மக்களின் ஆட்டங்களைக் கண்டறிந்து ஊகிக்கலாம். ஆஸ்திரேலிய ஆதிவாசிகள், புதர்களுள் ஒளிந்திருக்கும் விலங்குகளை வேட்டையாடுவது போலக் குழு நடனமாடுவார்கள். புதர்களை விலக்கிச் செல்வது போல முதலில் சைகை செய்து ஆடுவார்கள், புதர்களிலிருந்து ஒலி வருவது போல் தங்கள் குரலாலும் இசைக் கருவிகளாலும் ஒலியெழுப்புவார்கள். விலங்குகள் ஓடுவது போல் ஓடி ஆடுவார்கள். பின்னால் அவற்றை பூமராங் (Boomerang) என்ற கருவியை எறிந்து கொல்வது போல் ஆடுவார்கள். அடிபட்ட விலங்கு துடிப்பது போல ஆடுவார்கள். இச் செயல்களின் மூலம் இயற்கை தம்மைப் பின்பற்றி விலங்குகளை இரையாக அளிக்கும் ஒன்று நம்புகிறார்கள். இங்கே தெய்வ நம்பிக்கை தோன்றவில்லை. ஆப்பிரிக்க இனக்குழு மக்கள் வலையில் மான்களை வீழ்த்துவது போல் நடனமாடுகிறார்கள். பெண்கள் மார்களாகவும் ஆண்கள் வேட்டைக் குழுவின

71