பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராகவும் பிரிந்து நின்று ஆடுவார்கள். ஆண்கள் தங்கள் உடலினுள் வெளியிலிருக்கும் ஒரு விலங்கின் சக்தி புகுவதுபோல நினைத்து வலைவீசுவது போல் ஆடுவார்கள். பெண்கள் வலையில் அகப்படுவது போல ஆடுவார்கள்.

மெலனீசியாவில் மீன் பிடிக்கும் பருவம் ஆரம்பிக்கும்போது விருந்தும் குழு நடனமும் நடைபெறும் அதில் காற்றடிப்பது, கடல் அலையின் படமிதப்பது வலை வீசுவது, மீன் வலையில் அகப்படுவது. கடகு கரை சேருவது, மீன் அதிகம் பிடித்தவர்கள் மகிழ்ச்சியால் அரிவது போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள். இதை ஆடிவிட்டுப் போனால் இயற்கை நம் செயல்களைப் போன்ற செயல்களைப் புரியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனைப் போலிச் செயல் மந்திரம் (sympathetic magic) என்று மானிடவியலார் கூறுவர். இதைப்போலவே பண்டைக்கால மனிதர்கள் குழு நடனங்கள் என்ற கலையுருவங்களைப் படைத்திருக்க வேண்டும்.

அவற்றின் எச்சங்களாகத்தான் பழைய குழுவாழ்க்கை அழிந்த பின்னும், பல குழு நடனங்கள் நாகரிக சமுதாயங்களில் நாட்டு நடனங்களாக எஞ்சியுள்ளன. கும்மி, ஒயில், முதலியன அவை.

சங்க காலத்தில் குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், பாலை நிலம், நெய்தல் நிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பரவி விட்டனர். மருத நில வாழ்க்கை இந்நில வாழ்க்கைகளில் எல்லாம் செழிப்பு மிக்கதாயிருந்தது. இங்குக் குழு வாழ்க்கை அழிந்து, அரசு தோன்றியது. பிற மக்களையும் அரசில் இணைத்துக் கொள்ளப் பல போர்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு குழுவாக அழிந்தது. குழு வாழ்க்கையையிழந்து மக்கள் மருதநில மக்களில் உழைப்பாளிகளாயினர். வாழ்க்கையில் கூட்டு வாழ்க்கையையிழந்த பின்னரும், இவ்வாழ்க்கையில் தோன்றிய பல கருத்துக்களும் நம்பிக்கை களும் எச்சங்களாயின. நம்பிக்கைகளில் பலவற்றிற்கு

72