பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழுக்கள் பல இனக்குழுக்களை வென்று இணைத்துக் கொண்ட தாம் பெரிய குழு அமைப்புக்கள் ஏற்பட்டன. உணவு கிடைக்கவும், போர் செய்து வெல்லவும், சில இனக்குழுக்கள் தங்கள் தொழில் நுணுக்க வளர்ச்சியின் மூலம், ஆற்றலைப் பெருக்கிக் கொண்டன. முதன் முதலில் ஆடு மாடுகளைப் பழக்கத் தெரிந்த குழுக்கள், தின வேட்டையாட வேண்டிய நாடோடி வாழ்க்கையை யொழித்து நிலையான வாழ்க்கை பெற்றனர். ஆடு மாடுகள் அவர்களுக்குப் பால், தயிர், நெய் முதலிய பொருள்களையும், இறைச்சியையும் அளித்து உணவிற்கு அலைய வேண்டிய அவசியத்தைப் போக்கின. இம்மக்களிடையே குழுவின் தேவைக்குப்போக எஞ்சிய செல்வம் பண்டமாற்றிற்குக் கிடைத்தது. அது மாட்டு மந்தைகளின் உருவத்தில் இருந்தது. பல மொழிகளில் பண்டை காலத்தில் செல்வம் என்பதற்கும் மாடு என்பதற்கும் ஒரே சொல் வழங்கி வந்துள்ளது. மேற்கூறிய கருத்துக்கு வலுவாக்கும், இந்தக் காலத்தில்தான் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து கொள்ளவும், நிலங்களைப் பயிரிடவும், இரும்புக் கருவிகள் பயன்பட்டன. அந்த இரும்பினால் வில்லும், வாளும் செய்து பிற குழுக்களை அடிமைப்படுத்தி தமது வேலைக்கு வைத்துக் கொண்டனர்.

இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த சமுதாய வரலாற்றின் திசைவழி. மனிதன் நிலைத்திருக்கும் வழிகளைக் கண்டுபிடித்து இயற்கைச் சூழலின் சில வெற்றிகள் பெற்றதும் மனிதன் தனது வலிமையை உணரத் தலைப்பட்டான்.

அவ்வாறு உணர்வதற்கு முன், இச்சமுதாயங்களில் குலக்குறி விலங்குகள், செடி கொடிகள் முதலியன மந்திர சக்தியுடையனவாக மட்டுமல்லாமல், இயற்கையைத் தாமே பாதிக்கக் கூடியவை என்ற நம்பிக்கை காரணமாக வணக்கத் திற்கும் உரியனவாயின. எனவே மந்திர சக்தியின் இருப்பிட மாயிருந்த இவை தெய்வங்களும் ஆயின.

74