பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்கள் சிங்கம் குகைக்கு வரவில்லை, மனித உறவை நாடிய அரசகுமார் தனது நகருக்குக் குழந்தைகளோடு திரும்பி விட்டாள். அவளைத் தேடிய சிங்கம் பலமுறை நகருக்குள் நுழைந்து விட்டது. அதனைத் துரத்த அனுப்பப்பட்ட வீரர்களைக் கொன்று விட்டது. அரசாங்க சோதிடன், விஜயனை அனுப்பினால் சிங்கத்தைக்கொல்லலாம் என்று கூறினான். இளவரசியும் சம்மதித்தாள். அரசன் தனது பெயரன் விஜயனை அனுப்பிவைத்தான். சிங்கம் அவனைக் கண்டதும் வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது. அவன் அதனைக் கொன்றான். பின்னர் இளவரசியின் புலம்பல் கேட்டு தனது தந்தையைக் கொன்று விட்டதற்காக வருந்தினான். சிங்கத்தின் மகள் என்பதால் விஜயன் சகோதரியை மணக்க எவரும் முன் வரவில்லை. எனவே இக்களங்கத்தைப் போக்க அவன் கப்பலில் பயணமாகி சில ஆண்டுகள் ஒரு தீவில் சென்று தங்கிப் பின்னர் இலங்கைக்குச் சென்றான். சிங்கத்தின் மகனால் முதலில் ஆளப்பெற்றதால் இத்தீவு சிங்களம் எனப் பெயர் பெற்றது.

இது எழுதப்பட்ட இலக்கியம் அளிக்கும் செய்தி. இப்புராண வரலாற்றிற்கு எவ்வாறு பொருள் கொடுப்பது ? இக்கதை மாந்தர்கள் வரலாற்றுக் கால் மனிதர்கள். புத்தருக்குப் பின் இவன் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது, அப்படியானால் இக்கதை புத்த அப்தத்திற்குப் பிற்பட்டது. சிங்கம் பெண்ணைத் தூக்கிச் சென்றதும், அதற்குக் குழந்தைகள் பிறந்ததும் உயிரியல் விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பானவை, ஆனால் ஒன்றை இங்கு நினைவு கூரவேண்டும், இனக்குழு பாக்களில் சிங்கக் குலக்குறியுடையவர்கள் தங்களைச் சிங்கவம்சம் என்றழைத்துக் கொள்வதுண்டு. அந்தக் குலத் தலைவன் இவளைக் கவர்ந்து சென்றிருக்கக் கூடும், பின்னர் அவன் சில மாதங்கள் போர் காரணமாக இங்கே வந்து சென்றிருக்க வேண்டும். சிங்கபுரத்து அரசன் மகளான அவன் நாகரிக நிலையில் பெருமை பெற்ற குலத்தைச் சேர்ந்தவள். எனவே திரும்பவும் தனது தந்தையின் நகரத்துக்குத் திரும்பியிருக்க வேண்டும். இதை

78