பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்து சமயத்தையும், வேதச் சடங்குகளையும் ஆரியப் பிராமணர் ஆதிக்கத்தையும் அவர்களது தத்துவங்களையும் எதிர்த்து நாஸ்திக மதங்களாகத் தோன்றிய பௌத்தமும் சமணமும் முதலில் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் அமைத்தன. பெளத்தர்கள், புத்தரோடு தொடர்புடைய துவங்களில் ஸ்தாபங்களைக் கட்டினர்.

பிற்காலத்தில் சாதாரண மக்களையும் சமயத்தில் சேர்த்துக் கொள்ள, இனக்குழு மக்களின் தெய்வங்களான தாரை, மஞ்சுஸ்ரீ முதலிய பெண் தெய்வங்களையும், மைத்ரேயர், லோகேஸ்வரர் முதலிய ஆண் தெய்வங்களையும் தங்கள் தெய்வ வரிசையில் இணைத்துக் கொண்டனர். எனவே பெளத்த சிற்பக் கலையில் செழிப்பைக் காட்டும் கும்பங்களும், தருமத்தைக் காட்டும் சக்கரமும், பக்தியைத் தூண்ட மனித உருவத்தில் தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. முதலில் உருவ வணக்கத்தை பௌத்தர்கள். தடை செய்தார்கள். திருவடி நிலையையும், தரும் சக்கரத் எதையுமே தமது மதத்தின் அடையாளங்களாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் மக்களைக் கவர்ந்து தங்களுடைய செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள இந்து சமயத்தைப் பின்பற்றி பல இனக் குழுக் கடவுளர்களுக்குத் தமது தெய்வ வரிசையில் இடமளித்தார்கள். அது மட்டுமன்றி புத்தருக்குப் பல பிறப்புக்கள் உண்டென்று கூறி பல இனக்குழுப் புராணக் கதைகளை ஒரு சட்டக் கதையினுள் அமைத்து ஜாதகக் கதைகள் என வழங்கினர். அக்கதைகளின் நிகழ்ச்சி களும், கதை மாந்தர்களும் சைத்ய சிற்பங்களில் இடம்பெற்றன. இக்கதைகளில்லா விட்டால் பௌத்தக் கலை, அடையாளங்களின் தொகுப்பாகவே இருந்திருக்கும். அழகான மனித உருவங்களைச் செதுக்க பெளத்த புராணக் கதைகளும், அலங்காரக் கலையை வளர்க்க தர்ம சக்கரமும், கும்பம், கலசம் முதலியனவும் பொருள்களை அளித்துள்ளன.

மனித உருவக் கலைப் படைப்புகள் அரசு தோன்றிய பின் குலக்குறிப் பிணைப்பிலிருந்து விடுபட்ட சிந்தனையால்

80