பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவங்கள் காலக் கிரமப்படி அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்துள்ளன. மிகப் பழைய உருவங்களின் சில உறுப்புக்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில உருவங்கள் இயற்கைத் தராதர அளவுக்குக் குறைந்து செதுக்கப்பட்டுள்ளன. தலையில் முகம் தெரியாதபடி கூந்தல் சுருள்சுருளாயிருக்கும். கைகள் சூம்பியிருக்கும். கால்கள் சூம்பியிருக்கும் மார்புகள் உடலில் பாதியளவுக்கு மேலிருக்கும். உடல் தடித்திருக்கும். இது தாய்த் தெய்வ மரபிலிருந்து செழிப்புத் தெய்வமான வீனஸ் - 7. இதைத் தற்காலத் கலைஞர்கள் நவீனக் கலைப்பாணி (Modern art formalism) என்று கூறலாம். உண்மை அதுவல்ல. கிரேக்க வைத்தியர்கள் கருவுறுவது, குழந்தை வளரும் உறுப்பு இவற்றைக் கண்டறிந்து சொல்வதற்கு முன் கிரேக்கர்களும், ரோமர்களும், குழந்தைப் பேற்றுக்கும் பெண்களின் மார்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணினார்கள். அதனால் அவ்வுறுப்பு மிகைப்படுத்தப்பட்டது. செழிப்புத் தெய்வம் குழந்தை பெறும் சக்தியை பெண்களுக்கு அளிக்க அந்த சக்தி அதனிடம் இருக்கவேண்டும். அந்தச் சக்தி மார்பிலிருப்பதாக நம்பியதால் இவ்வுறுப்பு மிகைப்படுத்தப்பட்டது. மற்ற உறுப்புகளுக்கு முக்கியத்துவமின்றிப் போயிற்று. குழு வாழ்க்கைக்கு இனப்பெருக்கம் முக்கியமானது. ஏனெனில் உணவுப் பற்றாக்குறை, இயற்கையின் கொடுமை இவற்றால், சேதமாகும் மக்கள் தொகையை ஈடுகட்டப் புதிதாகக் குழுவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். இந்தச் சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் நம்பிக்கையில் இத் தெய்வத்திற்கு எந்த உறுப்பு அதிகமாகத் தேவையோ அதனை மிகைப்படுத்தினார்கள்.

கிரேக்க மருத்துவர்கள் குழந்தை பிறப்பு பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்து வெளியிட்டார்கள். அது ரோமில் பரவியது. அதன் பின்னர் ரோம மக்களது கருத்து மாறியது. அவர்களுடைய செழிப்புத் தெய்வமான வீனஸின் உருவமும் சிற்பங்களில் மாறியது. கருப்பை வயிற்றில் இருப்பது தெரிந்த பின்னர் மார்பின் பருமனைக் குறைத்து

82