பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துள்ளன. இவர்களுக்குச் செழிப்புத் தெய்வங்கள் இருந்திருக்க வேண்டும். இன்னும் பரவலாக அகழ்ந்து ஆராய்ந்தால் தமிழ் நாட்டின் பண்டைக் காலம் பற்றி அறிந்து கொள்ளவும். தமிழகக் கலையின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ளவும் சான்றுகள் கிடைக்கும். அரிக்கமேட்டில் ரோமானியர்களின் படைப்புக்களான பாண்டங்களே அதிகம் கிடைத்துள்ளன. தமிழ் மக்களது படைப்புக் விலங்கு வடிவில் உள்ள சுட்ட மண்ணாலான புதை தாழிகளும், தாழிகளுள் சில கலைப் பொருள்களும் கிடைத்துள்ளன.

கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் இரண்டிடங்களிலும் கிடைத்த பொருள்களில் வரலாற்று முற்காலப் பொருள்கள் மிகக் குறைவே. வரலாற்று முற்காலத் தொல்பொருள்களைத் தேடிக் கண்டு பிடித்து ஆராய்தல் வேண்டும்.

நமது இலக்கியத்தின் மிகத் தொன்மையான பகுதிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் நமது கண்கள் நிலை கொண்டிருப்பதை அறிகிறோம். இசைக்கருவிகளில் முதலில் தோன்றியவை தோல்கருவிகள். பின்னர் தோன்றியவை துளைக்கருவிகள். அதன் பின்னரே நரம்புக் கருவிகள் தோன்றின. சங்க இலக்கியங்களில் மிகவும் வளர்ச்சி பெற்ற யாழ் வகைகள் பல சொல்லப் பட்டிருக்கின்றன. இசைப்பாணர்களிலும், அவர்கள் பயன்படுத்தும் கருவி பற்றி சிறுபாணர், பெரும்பாணர், என்று பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பாடகர்களில் பல பிரிவுகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. மிக வளர்ச்சியடைந்த நிலையில் தான் சங்க காலத்தில் இசைக்கலை காணப்படுகிறது. அதற்கு முன் பறையும், குழலும், இன்னும் பல கருவிகளும் இருந்தன. வேட்டைக்கும், இசைக்கும் உள்ள தொடர்பையும், மாடுபிடித்தல், மாட்டைப் பழக்குதல், மாட்டைக் களவாடுதல் போன்ற நிகழ்ச்சிகளில் இசையின் பங்கு என்னவென்பதையும், விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பயிர்த் தொழில் செயல்களில் இசையின் பங்கு என்னவென்பதையும் இலக்கியங்களிலிருந்து ஆராய்தல் வேண்டும். தற்காலத் தமிழ் இனக்குழு மக்களிடம் வழங்கி

86