பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரும் இசையை அறிந்து, பழைய சான்றுகளோடு ஒப்பிட்டால் நமது இசை வரலாற்றின் ஆரம்பத்தை அறியலாம்.

நமது இலக்கியத்தின் மூலம் பலவகைக் குழு நடனங் களைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குறிஞ்சி நில் மக்கள் ஆடிய ஆடல்கள் வேட்டை வாழ்க்கையோடு தொடர்புடையன. அவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்து அவை பற்றிக் கூறும் பாடல்களின் காலத்திற்கு முன் இக்கூத்துக்கள் இருந்த நிலை பற்றி அனுமானிக்கலாம். இக்கூத்துக்களின் வளர்ச்சியை முல்லை நில நாகரிக காலத்தில் காணமுடியும். முல்லை நிலக் கூத்துக்களின் எச்சத்தை ஆய்ச்சியர் குரவையில் காணலாம். குறிஞ்சிநிலக் கூத்துக்களின் எச்சத்தைக் குன்றக் குரவையில் காணலாம். இவ்வெச்சங்களை, முற்கால ஆடல்களின் வருணனைகளோடு ஒப்பிட்டு, வரலாற்று முற்கால மக்களின் ஆடல்களைப் பற்றிய அனுமானங்களைப் பெறமுடியும்.

இவ்வாறே சிற்பக்கலை பற்றியும், ஓவியக்கலை பற்றியும் ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும். நடுகற்களின் வரலாறு பற்றி ஆராய்ந்தால் நமது சிற்பக் கலையின் தோற்றத்தை அறியலாம். முதலில் வெறும் கற்கள் போரில் இறந்த வீரனது அடையாளமாக நடப்பட்டன. பின்பு அவற்றில் அவனைக் கடவுளாக எழுதினார்கள். அதன்பின் வரலாற்றுக் காலத்தில் மனித உருவத்தில் படைப்புச் சிற்பங்கள் படைக்கப்பட்டன. இக்கல் அதன் பின்னர் கோயிற் சிற்பங்களாகத் தெய்வங்களைப் படைக்கப் பயன்பட்டன.

ஓவியங்களைப் பற்றி அறியப் பிற்காலச் சான்றுகளிலிருந்து முற்கால நிலையை அனுமானம் செய்ய வேண்டும். பிரான்சில் கிடைப்பது போன்ற பண்டைக் குகைச் சித்திரங்கள் எவையும் தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. பிற்காலச் சித்திரங்களின் வளர்ச்சி நிலையிலிருந்து முற்காலம் நோக்கி சான்றுகளின் துணையோடு ஆராய்தல் வேண்டும். இந்நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான சான்றுகளை

87