பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் காணலாம். அகழ்வாராய்ச்சிச் சான்றுகளை இனித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

உலக மானிடவியல் ஆராய்ச்சிகள், தமிழக அகழ்வாராய்ச்சிச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள். பிற்கால வளர்ச்சி நிலையிலுள்ள சிற்பங்கள் முதலியவற்றின் துணை கொண்டு, ஒப்பியல் விஞ்ஞானமுறை - ஆய்வுகளின் மூலம் தமிழகத்தின் கலை வரலாற்றின் தோற்ற கால நிலையை அறிய முயல வேண்டும்.

மேற்கூறியவற்றிலிருந்து கீழ்க் காணும் முடிவுகளுக்கு வருகிறோம்.

1. உலகில் கலைகள் சமுதாய வாழ்க்கையின் துவக்க காலமான, ஆதியில் தற்காலத்திற்கடுத்த காலத்தில் தோன்றின.

2. துவக்க காலத்தில் குழுவோடு தனி மனிதன் தனது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ளவும், இயற்கைச் சக்திகளை எதிர்த்துப் போராடத் தனது குழுவின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளவும் கலைகளைப் படைத்தான். தடனத்தையும், குலக்குறிச் சடங்குகளையும் செய்தால், தனது குழுவின் ஆற்றல் வளருமென்று பண்டைக்கால பணிதன் நம்பினான். அதற்காகக் குலக்குறி விலங்குகளின் படங்களை வரைந்தான். உருவங்களையும் செய்தான்.

3. சிற்பம், ஓவியம், நடனம் முதலிய மூன்றும் மற்ற கலைகளுக்கு முந்தியவை. இசை பொருளற்ற குரல் ஒலியாகவும், கருவி ஒலியாகவும், நடனத்துக்குப் பின்னணியாக மட்டும் இருந்தது.

4. சமுதாய வளர்ச்சியினால் உடைமையாளர், உடைமையற்றோர் என்ற இரு பகுதிகள், சமுதாயத்தில் ஏற்பட்டு விட்ட பின் கூட்டு நடனம், கூட்டமைப்பில் இருந்து தோன்றிய கலைகள், உடைமையற்றோரிடையே பழங்கால் எச்சமாக நின்றன. இரு கூறுபட்ட சமுதாயத்தில் தனித்

88