பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறமையுடைய கலைகள் வளர்க்கப்பட்டன. கலைஞர்களது கலைத்திறமை ஒரு தொழிலுக்கு அடிப்படையாயிற்று.

5. சிற்பக் கலையில் முதலில் விலங்குகளும் பின்னர் கலப்பு மனித விலங்குருவங்களும், பின் மனித உருவங்களும் படைக்கப்பட்டான். சமுதாய வளர்ச்சியடிப்படையில் மனித சிந்தனை வளர்ச்சி பெற்ற வழியிலேயே கலைப் பொருள்களைப் பற்றிய நம்பிக்கைகள் மாறியுள்ளன. விலங்கு தமக்கு சக்தியளிக்கும் என்று இனக்குழு மக்கள் நம்பினர். இயற்கையில் சில வெற்றிகள் பெற்ற மக்கள் மனித சக்தியை உணர்ந்தனர். பழைய எச்சமாக விலங்கின் ஒரு பகுதியையும், புதிய சிந்தனையின் விளைவாக மனித உருவத்தின் ஒரு பகுதியையும் நம்பிக்கையில் இணைத்துக் கலைப் பொருளாக்கினர். அதன் பின் இரும்புக் காலத்தில் மனிதன் இயற்கையின் மீது பல வெற்றிகள் பெற்றபின் தன் உருவமாகவே தனக்கப்பாற்பட்டது என்று தான் கருதிய தெய்வங்களைப் படைத்தான்.

6. மனித உருவத்தை அவன் உள்ளத்தில் கொண் டிருந்த நம்பிக்கையின் புறவடிவமாகவே படைத்தான் , எனவே அது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது.

7. பிற்காலத்தில் மனித உறுப்புக்களின் வேலைகளை அறிந்து கொண்ட பிறகு தன் உருவமாகவே மனிதன் தெய்வ உருவங்களைப் படைத்தான். தன்னைவிட உயர்ந்த சக்தி யுடையவை என்ற நம்பிக்கையில் தெய்வ உருவங்களில் மனித உறுப்புக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டினான்.

89