பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் படைப்புக் கதைகள் கதைமூலங்களைப் பற்றி ஓர் ஆய்வு (உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி வரலாற்று முற்கால மக்கள் பல கதைகளைப் படைத் திருக்கிருர்கள். அவற்றுள் இருவிதமானவற்றை வேறுபடுத்திக் காணலாம். உலகைப் படைத்தது தாய்தான். அவளை உலக மாதாவாகக் கருதிப் படைக்கப்பட்ட கதைகள் ஒரு விதம், உலகைப் படைத்தது தந்தைதான். அவர் உலகப் பிதா என்று கருதிப் படைக்கப்பட்ட கதைகள் இன்னுெரு விதம். சில கதைகளில் தாய் கடலையும், வானையும் படைத்தாள் என்றும், பூமியையும், ஜீவராசியையும் அவளுடைய வழித்தோன்றலான ஒர் ஆண்மகன் படைத்தானென்றும் கூறப்படுகிறது. இவை யாவும் முற்கால நாகரிக மக்களின் வாய்வழிக் கதைகள், இவற்றை எழுத்து வடிவம் தோன்றிய பின்னர் தனிக் கதைகளாகவும், காப்பியங்களின் பகுதிகளாகவும், சமய நூல்களின் பகுதிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவற்றுள் பழமையானவை பாபிலோனிய சுமேரியக்கதைகள், கிரேக்கக்கதைகள், யூதர்களது கதைகள், ஆரியர் களது வேத புராணக் கதைகள் முதலியன. இக்கதைகள் தோன்றிய சமுதாயச் சூழல்களை அகழ்வாராய்ச்சி, மானிடவியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து இக்கதைகளை உருவாக்கிய மக்களின் பண்பாட்டு நீலைகளிலிருந்து அக்கதைகள் எவ்வாறு உருவாயின என்பதை இக்கட்டுரையில் ஆராய் கிறேன். ஆர்) உலகைப் படைத்தது யார்? இக்கேள்வியை வரலாற்றுக்கு முற்காலத்திலும் நாகரிகத் துவக்க காலத்திலும் வாழ்ந்த § {}