பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலருகில் உட்கார்ந்திருக்கிறது. ஒரு கழுகு ஆளிரிஸின் தலைப்பக்சமும், மற் ருென்று காலினருகில் பறப்பது போல சித்திரங்கள் இருக்கின்றன. அடுத்த சித்திரங்களில் ஆஸிரிஸ் தலையில் மகுடத்தோடு தலையைத் தூக்குவது போலவும், பின் எழுந்து நிற்பது ாேபலவும் காணப்படுகிருன். கடைசிச் சித்திரத்தில் ஆஸிரிஸ் செங்கோலைக் கையிலேந்தி நிற்கிருன். ஒரு தாடி தரித்த ஆண் தெய்வம் கையில் கிரக்ஸ் அனஸ்தா என்ற உயிரின் அடையாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறது.8 இச்சிற்பங்கள் பருவ மாற்றத்தின்போது பண்டைய எகிப்திய மக்கள் நிகழ்த்திய சடங்குகளுக்கு அடிப்படையான நம்பிக்கைகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இச்சடங்குகளிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் தான் ஆஸிரிஸ், ஐஸிஸ் புனைகதை உருவாகியது. எனவே இயற்கையின் மாற்றத்தை விளக்க முடியாதபோது மாந்திரீகச் சடங்குகளைக் கையாண்டு, அதனை தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ப மாற்றுகிற போது தோன்றுகிற நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அடுத்த பரம்பரைக்கு அவற்றை வழிச்செலுத்தவும் இப்புனை கதைகள் தோன்றின. இக்கதைகள் குறிப்பிட்ட சமுதாய நிலைமைகளில் குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் எழுந்தன. இவை சமூக மாறுபாட்டுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்ருற் போல் மாறின. வெவ்வேறு சமூக அமைப்பும் பண்பாட்டு வளர்ச்சியும் உடையவர்கள் கலப்புறும் பொழுது இணைந்தும், முரண்பட்டும் வேறுபட்டும், வளர்ச்சியும், சிதைவும் அடைந்தனர். எகிப்தில் நடைபெற்ற இச்சடங்கு மிகப் பழமையானது, எகிப்தின் பாராவோக்கள், புரோகிதர்களாகவும், ஆடுபவர் களாகவும் செயல் புரிந்தனர். மன்னர்களான பின், அவர்கள் ஆஸிரிஸ் சடங்குகளின் கதாநாயகர்களாகினர். பாரோவோ சாவதாகவும், உயிர்த்தெழுவதாகவும் இச் சடங்கு நடைபெற்றது. அதன் பின்னர் மன்னனது 琴 93