பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் தன்மையை நிலைநாட்டுவதற்காகவே கதைகள் புனையப்பட்டு, இச்சடங்கிற்குப் பொருளை அளித்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவினை விளக்க எழுந்த கதை சமூகப் பொருளாதார அனமப்பை நிலை நிறுத்தப் பயன்படுத்தப்பட்டது. ஆடுமாடுகள் பல்கிப் பெருகவும், உயிர்கள் செழித்து வளரவும், மனித இனம் பெருகவும் இச்சடங்கு அவசியமென எண்ணிய புராதன எகிப்தியர்கள், தங்கள் பண்பாட்டுக் கதாநாயகனைச் சிந்தனை யில் தோற்றுவித்து, ஆண்டுதோறும் அவனது சாவையும் உயிர்த்தெழுதலையும் கொண்டாட அவனைச் சுற்றி ஒர் கதையையும் படைத்தார்கள். இது தனி மனிதச் சடங்கல்ல. சமுதா ச் சடங்கு. இது சமூக நலனை நோக்கமாகக் கொண்டது. தனி மனித மோட்சத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. அரசனுடைய தெய்வத் தன்மை, விவசாயப் பருவங்களின் பாதுதலேக் குறிக்கும். 'ஹோரஸ் ஆஸிரிஸ் குறியீடு மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கும் புனைகதைகளும் எழுந்தன. இதனைப் போலவே புராதன மக்கள் பாபிலோனியாவில் தம்மூஸ்-இஷ்டார் கதையையும் புனேந்தார், ’ - நாகரிகத் துவக்க காலத்துப் புனை கதையொன்றின் தன்மையை மேலே கண்டோம். இக்கதை நாகரிகம் முற்றிய காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களால் கதை மாறியிருக்க வேண்டும். நாகரிக காலத்துக்கு முன்னர் எகிப்தை அரசிகள் ஆண்டனர். அவர்கள் மனம் செய்து கொள்வதில்லை. விரும்பிய ஆண்மகளுேடு ஓராண்டு வாழ்ந்து பின்னர் அவனைப் பலியிட்டு விடுவாள். இது பெண்ணுதிக்க விவசாய சமுதாயத்தில் நடைபெற்றது. கல்ப்பை விவசாயம் தோன்றியபின் ஆளுதிக்க சமுதாயம் படிப்படியாக எழுந்தது. அப்போது தனது காதலனைக் கொல்லுவது நின்றது. ஆல்ை ஒரு நான் அவள் அரச பதவியை இழந்து, 94