பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேருெருவனுக்கு அதனே அளித்து அவனைப் பலியிடும் வழக்கம் தோன்றியது. பின்னர் அதுவும் நின்று ஆளிரிஸ் இறந்து உயிர்ப்பித்தலைப் பொம்மை இறந்து உயிர் பெறும் சடங்காக மக்கள் கொண்டாடியிருத்தல் வேண்டும். இம் மாறுதல்கள் நடந்த கால எல்லையில் தான் ஹோரஸ் ஆளிரிஸ் கதை புனையப்பட்டிருத்தல் வேண்டும் , இப் புனைகதை போலவே, பல இயற்கை நிகழ்ச்சிகளைப் பற்றிய சடங்குகளும் அவற்றிலிருந்து தோன்றிய புனைகதை களும் பண்டைய மக்களிடையே வழங்கி வந்தன. சூரியனைப் பற்றிய சடங்குகளும் கதைகளும், சந்திரனைப் பற்றிய சடங்கு சளும் கதைகளும், அக்கினியைப் பற்றிய சடங்குகளும் கதை களும் வழங்கி வந்தன. மூலக்கதை சமுதாய மாற்றத்திற் கேற்ப அவ்வச் சமுதாய மாற்ற கட்டத்தில் மாற்றப்பட்டிருக் கின்றது. எனவே புனை கதைகள் தற்காலப் படைப்புக் கதை களைப் போன்றவையல்ல. அது ஒரு கால நிலை வாழ்க்கையே யாகும். அதாவது வாழ்க்கையை இயக்கும் நம்பிக்கைகளே அவை அடிப்படையாகக் கொண்டவை. இதனுல்தான் பேராசிரியர் மாலினவ்ஸ்கி பின் வருமாறு கூறுகிருர் : 'காட்டுமிராண்டி சமுதாயத்தில் வழங்கிய புனே கதை அதாவது மூலநிலைப் புனைகதை சொல்லப்படுகிற ஒரு கதை யன்று. அது வாழ்க்கையின் உண்மையாகும். இன்று நாம் படிக்கும் ஒரு நாவலின் தன்மையைப் பெற்றதன்று நாகரிக முற்காலப் புனேகதை. அக்கதையின் நிகழ்ச்சிகள் உண்மை யில் புராதான காலத்தில் நடைபெற்றதாக அக்கதையைச் சொல்லுபவர்கள் நம்புகிருங்கள். அது மட்டுமல்லாமல் அக்கதையின் சம்பவங்கள், நிகழ்ந்த காலத்திலிருந்து தம் காலம் வரை உலகையும், மனித விதியையும் இயக்கி வருவ தாகவும் அவர்கள் நம்புகிரு.ர்கள். ஒரு கிறிஸ்தவன் பைபிள் கதையான சிருஷ்டி, மனிதன் தாழ்வு, சிலுவையில் மறித்த கிறிஸ்துவினல் மனிதன் மேன்மை பெறுவது, ஆகிய சம்பவங்கள் எவ்வளவு உண்மையெனக் கருதுகிருளு.ே