பக்கம்:தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் சா. கிருட்டினமூர்த்தி இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை 600 113. - அணிந்துரை சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டது; பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டது. மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையில் சந்திக்கும் வெற்றிக்கும். தோல்விக்கும் காரணமாக அமைகின்ற ஏதேனும் ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியைத் தன்னுடைய வாழ்க்கையில் மீண்டும் ஏற்படுகின்ற வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்று நினைக்கிற மனப்பாங்கு உடையவன். இம்மனப்பாங்கு வளருங்கால் அப்பொருளையோ நிகழ்வையோ நம்பியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். எனவே இந்நிகழ்ச்சி தொடரும் நிலையில் அதனைப் பழக்கப்படுத்திக்கொள்ளவும் அவன் தயங்குவது இல்லை. அதன்பின்னர் அது வழக்கமாகிவிடுகிறது. நம்பிக்கை. பழக்கம், வழக்கம் ஆகிய மூன்றும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. எந்த ஓர் உயிரினமாக இருந்தாலும் இத்தகைய பழக்க வழக்கத்திற்குத் தன்னுடைய அனுபவ அளவிலேயே ஆட்பட்டுவிடுகின்றது. எனவே நம்பிக்கை வயப்படாத மனிதனும். பழக்க வழக்கங்களுக்கு ஆட்படாத மனிதனும் இல்லையென்றே கூறலாம். ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையை நாம் அறியவேண்டுமென்றால் அச்சமுதாயத்தின் நம்பிக்கை, பழக்க வழக்கங்களை, நாம் ஆய்வுசெய்ய வேண்டும். அச்சமுதாயத்தின் கிரில் ஓட்டத்தில் உருவாக்கப்படுகின்ற இலக்கியங்களில், அச்சமுதாயத்தின் வெளிப்பாடாக இத்தகு பழக்க வழக்கங்கள் பரவலாகப் பதியப்படுகின்றன. நம்முடைய இலக்கியங்களிலிருந்து இத்தகைய சான்றுகளை நம்மால் அறிந்துகொள்ள இயலும். தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தித் தமிழரின் பெருமையை உலகிற்கு எடுத்துக்கூறும் பணியில் தள்ளை முழுமையுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 'தமிழர் பழக்க வழக்கங்களும்