நம்பிக்கைகளும்' என்ற நூலை 1980இல் வெளியிட்டது. இந்நூலாசிரியர் முனைவர் க. காந்தி அவர்கள் தன்னுடைய பெரும் முயற்சியாலும் அரிய உழைப்பாலும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். இந்நூல் தமிழரின் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும். தமிழரின் நம்பிக்கை வயப்பட்ட பழக்க வழக்கங்கள். தமிழரின் மீவியல் ஆற்றல்கள் பற்றிய நம்பிக்கைகள், தமிழர்களின் வாழ்வியல் மரபுகள் என்ற உட்கூறுகளில் இப்பொருண்மை தொடர்பாக அனைத்துச் செய்திகளையும் மிகத் தெளிவாகவும், ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இந்நூலின் பெருகிய தேவைகருதி இதனை மறுபதிப்புச் செய்ய நிறுவனம் எண்ணியது. இதற்கு அனுமதி அளித்த பதிப்புக் குழுவினர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு கல்வியமைச்சர் திருமிகு செ. செம்மலை அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு பு.ஏ. இராமையா இ.ஆ.ப., அவர்களுக்கும், சிறப்புச் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆ.ப., அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன். இந்நூலினை அழகுற அச்சிட்டுத்தந்த சென்னை மைக்ரோ பிரிண்டர்ஸ் அச்சகத்தார்க்கு நன்றி. சென்னை 13.11.2003 இயக்குநர்
பக்கம்:தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை