பக்கம்:தமிழர் மதம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் அஎ கொண்ட சிவை மலை மகள் எனப் பட்டாள். மகள் பெண் தெய் வம். ஒ.நோ : நில மகள், நா மகள், மலர் மகள். இதை நோக்காது, மலை மகள் என்னும் பெயருக்கு மலை யரசன் மகள் என்று பொருள் கொண்டு, அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி. னர். அக்கம் = முள்,முண் மணி. அக்கம் என்னும் தென்சொல்லை அக்ஷ என்று திரித்து, அதற்குக் கண் என்னும் பொருளூட்டி, சிவ பெருமான் கண்களினின்று விழுந்த நீரில் தோன்றிற் றென்று கதை கட்டி, சிவ பெருமானோ டிணைக்கப் பட்ட உருத் திரன் என்னும் ஆரியத் தெய்வப் பெயரொடு சேர்த்து, உருத்தி ராக்கம் (ருத்ராக்ஷ) என்றனர். கொக்கிறகு என்பது ஒரு வகைப் பூவின் பெயர், வடிவிலும் நிறத்திலும் அளவிலும் கொக்கிறகை ஒத்திருப்பதால், அப் பெயர் பெற்றது. அரச மன்னார்குடி யருகி லோடும் பாம்பணி யாற்றின் வடகரையிலுள்ள,பாம்பணிக் கோயிலிற் கொக்கிறகுச் செடியுள்ளது. இதை யறியாது, கொக்கு வடிவில் வந்த குண்டாசுரன் என்னும் அசுரனை, சிவ பெருமான் கொன்று அவன் இறகை அணிந்தனன் என்று கதை கட்டினர். மரைக் காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி, மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந் ததனால் அவ்விடம் அப் பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக் காடு எனத் திரித்து, ஒரு காலத்தில் ஆரிய மறைகள் சிவனை வழிபட்டு வீடு பெற்ற இட மென்று, இயற்கைக்கு மாறான தும் ஒரு போதும் நிகழாததுமான பொருட் கரணியங் காட்டி விட்டனர். (கஉ) பகுத்தறிவைக் கொல்லும் பச்சைப் பொய்க் கதைகள் விருகன் அல்லது பன்மன் (பஸ்ம) என்னும் அசுரன் சிவ பெருமானை நோக்கித் தவஞ் செய்ய, அவர் தோன்றி, என்ன இவு வேண்டு மென்று வினவினார். அவன், தான் எவர் தலைமேற் கை வைக்கினும் அவர் இறக்க வென இவு வேண்டிப் பெற்று, அதன் உண்மை யறிய அப் பெருமான் தலை மீதே கை வைக்கச் சென்றான். அவர் உடனே மறைந் தருளினார். அன்று பெண் ணுருக் கொண்டு அங்கு வந்த திருமாலை அவ் வசுரன் விரும்பிப் பின்செல்ல, அவனைக் குளித்து ஏவினார். அவன் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/103&oldid=1428981" இலிருந்து மீள்விக்கப்பட்டது