கூ0 மும் மாசு தமிழர் மதம் "மூன்றுள குற்ற முழுதும் நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே." "காமம் வெகுளி மயக்க மிவைகடிந் தேமம் பிடித்திருந் தேனுக்கு...... என்று திருமூலரும், (திருமந். உஙகூசு), "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (ஷ் உஙஎ), (குறள். உகூO) என்று திருவள்ளுவரும், கூறியுள்ள வாறு, மும் மாசுகள் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றே. இவையே ஆணவம் மாயை காமியம் என்றும் சால்லப்படும். ஆணவம் என்பது செருக்கு. அவன் ஆணவம் பிடித்தவன் என்னும் உலக வழக்கையும், அருணந்தியார் முதற்கண் மெய் கண்டாரின் இளமை நோக்கி எள்ளிச் செருக்கொடு நின்று, "ஆணவம் எவ் வாறிருக்கும்? என்று வினவியதற்கு, மெய் கண்டார் அருணந்தியாரைச் சுட்டி "அது இவ் வாறிருக்கும். " என்றதையும், நோக்குக. ஆள் - ஆண் - ஆணவம். ஆணவத்தால் தோன்றுவதே வெகுளி. மாயை என்பது மயக்கம். காமியம் என்பது காமம். அதுவே தீவினைகட் கெல்லாம் வேர். "ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும்." (குறள்.ந.எ0). ஆணவம் அணுவளவின தென்றும் மயக்கஞ் செய்வ தென் றும், காமியம் கன்ம மென்றும், ஆரியர் கூறியது தவறாம். ஆண வம் என்னுஞ் சொல்லை ஆரிய மாக்கவே, அதை அணு என் பதன் திரி சொல்லாகக் கொண்டனர். மயக்கஞ்செய்வது மாயையே யன்றி ஆணவ மன்று. வினைப் பயனாகிய ஊழ்(நியதி)
பக்கம்:தமிழர் மதம்.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
