பக்கம்:தமிழர் மதம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் நீளும். அதனாற் சிவ என்னும் பெயர் ச-ஆம் வேற்றுமையிற் சிவாய என்னும் வடிவு கொள்ளும். அதனொடு புணரும் நமஸ் (வணக்கம்) என்னும் வடசொல் நம: என்று திரியும். ஆகவே, சிவாய நம: என்னும் இரு மொழித் தொடர்ச் சொல், உண் மையில் ஆறெழுத்தே யன்றி ஐந் தெழுத் தாகாது - அது ஐந்தெழுத் தாகும் . சிவாய நம என்பது நமசிவாய என்று தமிழில் முறை மாறி நிற்கும் போதும், நமச்சிவாய என்று இடையில் வலி மிக்கு ஆறெழுத் தாகும். " நமச்சிவாய வாழ்க நாதன் றாள் வாழ்க என்று மாணிக்க வாசகரின் சிவ புராணம்' தொடங்குதல் காண்க. "நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி (திருமத். உசுச) சிவாய நம என்னும் இரு மொழித் தொடரைச் சிவய நம என்று இடையாகாரங் குறுக்கி, அது சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்னும் தென் சொற்களின் முதலெழுத்துத் - தொகுப் பென்றும்; அவ் வெழுத்துக்கள் முறையே சிவன், ஆற்றல் (சத்தி, சிவை), ஆதன் (சீவன்), மறைப்பு (திரோ தாயி) அல்லது மாசு (மலம்), மாயை என்பவற்றைக் குறிக்கு மென்றும், கூறுவது உண்மைக்கும் உத்திக்கும் மொழிநூற்கும் ஒரு சிறிதும் பொருந்தாது. இது, North, Rast, West, South என்னும் சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பே news! என்னும் சொல்லென்றும், அது நாற் றிசையி னின்றும் வரும் செய்திகளைக் குறிக்கு மென்றும், கூறுவ தொத்ததே. சிவ என்பது, சிவம் என்னும் தென் சொல்லின் வட மொழி வடிவம். அதன் அகர வீறு ஆகார வீ னது வட மொழி யுருபுப் புணர்ச்சி விளைவு. 'ய' வடமொழி ச-ஆம் வேற்றுமை யுருபு. நம என்பது, நமஸ் என்னும் வடசொல் லின் திரிபான நம: என்பதன் கடைக் குறை அல்லது இறு கேடு. இங்கனம், சிவாய நம: என்னும் வடமொழித் தொட ரைச் சிவய நம என்று திரிப்பின், அது வடமொழித் தொடரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/109&oldid=1429688" இலிருந்து மீள்விக்கப்பட்டது