பக்கம்:தமிழர் மதம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் மாகாது தென்மொழித் தொடரு மாகாது இடைத் தட்டில் நிற்ப தாகும். அதையும் எழுத் தெழுத்தாகப் பிரிப்பின் ஒன்று மீல்லாது போம். - சிவம் என்பது, செம் என்னும் அடிப் பிறந்து, ஒரு வகை யிலும் திரியாது என்றும் ஒரே தன்மைத் தாய் நிற்கும் செம் பொருளாகிய கடவுளைக் குறிக்கும் தென்சொல். “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு.) என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க (குறள். கூடுஅ). "செம்பெரு மானே சிவபுரத் தரசே" (திருவாச. வாழாப் பத்து, உ). சுள்-செள்-செய்-செய்ம்மை -செம்மை -செம். செம்--செவ்-செவ-சிவ-சிவம்-சிவன், செம்மை = தீயின் நிறமாகிய சிவப்பு, தீயின் தன்மை யாகிய நேர்மை, கோடாமை, திரியாமை, நடு நிலை, சிவ என்பது தமிழிற் சிவன் என்பதன் விளி வடிவம். அதைச் "சி', 'வ' என்று எழுத்துப் பிரிப்பின் அச் சொல் லாகாது. 'சீறிட்டு நின்று சிவாய நமவென்ன” (கை), “மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் (கூடுகூ), "சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோத' (கூரு அ), "தேறாச் சிவாய நமவெனத் தேறிலே (உசசு0), தெளிய வோ திச் சிவாய நமவென்னும்?” (உசுடுக), ""தெள்ளமு தூறச் சிவாய நமவென்று” (உசுகா), ( திரிமலம் நீங்கிச் சிவாயவென் றேதும் (உசுசுடு), சிவாய நமவெனச் சித்த மொருக்கி (உசுசுக),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/110&oldid=1429690" இலிருந்து மீள்விக்கப்பட்டது