பக்கம்:தமிழர் மதம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் கூரு (உருவில் சிவாய நமவென வோதே (உஎடுஉ), என்று திருமூல நாயனாரும், ' சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு” (நல். கடு), என்று ஔவையாரும் பாடியிருப்பதால், சிவாய நம என்பதே மூல வடிவென்றும், அது இருமொழித் தொடரென்றும், சிவய நம என்பது அதன் திரிபென்றும், சிவ என்னும் நிலைச் சொல்லே தென் சொல் லென்றும், அறிந்து கொள்க. அது பருவியல் ஐந்தெழுத்து (ஸ்தூல பஞ்சாக்ஷா) என்றும், சிவய நம என்பது நுண்ணியல் ஐந்தெழுத்து (ஸுஷ்ம பஞ்சா டிரா) என்றும், சிவய சிவ என்பது அதி நுண்ணியல் ஐந் தெழுத்து (அதி ஸும பஞ்சாக்ஷர) என்றும், திருமந்திர உரை யாசிரியர் கூறுவர். ஆயின், மூலத்திற் சிவாய என்று வகர ஆகார முள்ள வடிவே யுள்ளது. ஆகவே, யாப்பு என்னும் தென் சொல்லின் முதலெழுத்தும் சிவாய என்னும் வடசொல்லின் இடை யெழுத்தும், முறையே, 'யூ' என்று குறு கினதாகக் கொள்ளப் பட்டதும் 'வ' என்று குறுக்கப் பட்டதும் தெளிவாம். இனி, சிவய', 'சிவ', 'சி' என்பவற்றையும் திருவைந் தெழுத்தின் வகைகளாகக் கொள்ளுவர். அவை அங்கன மாகாமை வெளிப்படை. தமிழரை மயக்கிச் சிவ மதத்தை ஆரிய வண்ண மாக் கற்கே, சிவாய நம என்னும் இரு மொழித் தொடர்த் திரியின் எழுத்துக்கட்கு வெவ்வேறு குறிப்புப் பொருள் குறித்துள்ளனர். அவ்வாறே, சிவன் சத்தி சீவன் செறுமல மாயை” - (உசுசு), என்று திருமூலரும் பாடி யுள்ளார். ஐந்து என்னும் தொகை பற்றி, திருவைந் தெழுத் தென்ப வற்றைச் சிவன் கை கால்களொடும் ஆடு மன்றங்க ளொடும் தொடர்பு படுத்திக் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/111&oldid=1429691" இலிருந்து மீள்விக்கப்பட்டது