பக்கம்:தமிழர் மதம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் " திருந்து நற் சயென் றுதறிய கையும் அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந் திருந்தகத் தீயாகுந் திருநிலை மவ்வே .” (திருமந். உஎடுக). "சி' யாப்பு தோக்கிச் சீ' என நீளும். அதை நாயோட் டும் மந்திரம்' என்பர் திருமூலர். "சேர்க்குந் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலிறைக் கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான்.” (உ. வி. 116). மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி பாலாம் செம் போடுமண் பற்றல்போல்-மேலாம் அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல் தவ நெல்லை குற்றாலம் தான். 1 சிவன் திரு நடத்தை ஐந் தொழில் நடம் என்பதால், இரு மொழித் திருவைந் தெழுத்து சிவன் ஐந்தொழிலொடும் தொடர்பு படுத்தப் பெறும். இனி, ஓதநூலார், மாந்தனுடல் தொடை முதல் மண்டை வரை இரு மொழித் திருவைந் தெழுத்து வடிவில் அமைந்திருப்ப தாகவும், வரைந்து காட்டுவர். சிவாய நம' என்பதில், ய, ந, ம, என்னும் மூவெழுத்துக் களையும் பிரித்துக் குறிப்புப் பொருள் கூறின், ராமாய நம, நாராய ணாய நம, குமாராய நம, கணேசாய நம என்பவற்றிலும் அவ் வெழுத்துக்களைப் பிரித்து அக் குறிப்புப் பொருள் கூறல் வேண்டும். அங்வனங் கூறும் வழக்கம் இல்லை. அதோடு அவை ஐந் தெழுத்தும் ஆறெழுத்தும் ஏழெழுத்துங் கொண்ட தொடர் களைச் சேர்ந்தவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/112&oldid=1429692" இலிருந்து மீள்விக்கப்பட்டது