பக்கம்:தமிழர் மதம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் அசு சிவ' என்னும் வடிவே ஏற்றதாம். ஆதலால், சிவனே இவையே, ஆரியர் தென்னாடு வருமுன்பும் இந்தியாவிற்குட் புகு முன்பும், தொன்று தொட்டு வழங்கிய குமரி நாட்டுத் தமிழர் வழக்காம். வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழை யாரியம் தேவமொழி யென்னும் ஆரிய ஏமாற்றும், தமிழரின் குருட்டு மூட நம்பிக்கையுமே, சிவ போற்றி என்னும் ஒரு மொழி மூல உண் மைத் திருவைந் தெழுத்தை மறைத்த தென்று, உண்மை யறிந்து செந்நெறி கடைப் பிடிக்க. சிவாய நம' என்னும் சமற்கிருதத் தொடரும், 'obeisance to $iva' என்னும் ஆங்கிலத் தொடரும், பொருள ளவிலும் பய னளவிலும் ஒன்றே , சிவன் என்னும் தென் சொல்லைக் கடன் கொண்டு, அதை ஒப்புக் கொள்ளாது வடசொல் லென்று ஏமாற்றும் ஆரியப் புரட்டு, இறைவனுக்கு ஏற்குமா? அப் புரட்டுச் சொல் மந்திர மாகுமா? எண்ணிக் காண்க. (கரு) மெய்ப் பொருளியல் எங்கும் நிறைந்துள்ள இறைவனே, சிவனியராற் சிவன் என்னும் பெயரால் வணங்கப் படுகின்றான். சிவன் பெயர்களுள் இறைவன் என்பதும் ஒன்று. இறைவன் எங்குத் தங்கி யிருப் பவன், இறுத்தல் தங்குதல். “இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனும்........ (மணி. உ எ: அக- க) என்று கி. பி. உ-ஆம் நூற்றாண்டிலேயே சிவன் வடிவங் கூறப் பட்டது. இறைவன் என்னும் பெயராலும் எண் குணத்தான் என் னும் இயல்பாலும், கடவுளும் சிவனும் ஒன்றே என்பது பெறப் படும். ஆயினும், இல்லறத்தார்க்கும் பொதுமக்கட்கும் எளிதாய் விளங்குமாறு, இறைவனையும் அவனாற்றலையும் பேருலகத் தந்தையும் தாயுமாக உருவகித்துச் சிவனும் சிவையும் என்ற னர். உலகிலுள்ள உயரிய உயிரினங்க ளெல்லாம் ஆணும் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/115&oldid=1429695" இலிருந்து மீள்விக்கப்பட்டது