பக்கம்:தமிழர் மதம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் (வித்தியேசுவரனும்) நின்று தொழிற்படுவ ரென்றும்; சிவம், ஆற்றல், ஓதை (நாதம்), விந்து என்னும் நான்கும் ஒடுக்க (லய) நிலையி லுள்ள சிவனின் உருவிலா (அரூப)த் திரு மேனிகளும்; என்றும் நல்லான் என்பது நுகர்வு (போக) நிலையி லுள்ள சிவனின் உருவ வுருவிலா (ரூபா ரூப)த் திருமேனியும், பெருவுடையான், உருத்திரன், மால், நான்முகன் என்னும் நான்கும் அதிகார நிலையிலுள்ள சிவனின் உருவு (ரூப)த் திரு மேனிகளும், ஆகு மென்றும்; திருவிலங்கம் (லிங்கோற்பவன்), நல விருக்கையன் (சுகா சனன்), ஆற்றல் தோற்றி (சக்திதர மூர்த்தி), மணவழகன் (கலியாண சுந்தர மூர்த்தி), மங்கை பங்கன் (அர்த்த நாரீசு வரன்), சிவை கந்தர் சேர்ந்தான் (சோமா ஸ்கந்தன்), சக்கர மீந்தான் (சக்ர வரதன்), முத்திரு மேனி (திரி மூர்த்தி),மாலிடங் கொண்டான் (ஹரி யர்த்தன், சங்கர நாராயணன்), தென்முக தம்பி (தக்ஷிணா மூர்த்தி), மண்டையேந்தி (பிக்ஷாடன மூர்த்தி, காபாலி), குறளன் முது கொடித்தான் (கங்காளன்), காமனைக் காய்ந்தான் (காமாரி), காலனை யுதைத்தான் (கால சங்கார மூர்த்தி), கடல் வளர்ந்தானைக் கொன்றன் (சலத்த ராரி), முப்புர மெரித்தோன் (திரிபு ராரி), எண்காற் புள்ளுருவன்(சரப மூர்த்தி), தஞ்சுண்டான் அல்லது கறை மிடற்றன் (நீல கண் டன்), முப் பாதன் (திரி பாதன்), ஒரு பாதன் (ஏக பாதன்), பே முருவன் (பைரவன்), விடை யேறி (இடபாரூடன் ), பிறை சூடி (சந்திர சேகரன்), நட வரசன் (நடராஜன் ,) கங்கை தாங்கி(கங்கா தரன்) என்னும் இருபத்தைந்தும் சிவ வழிபாட்டு வடிவங்கள் என்றும்; ஆற்றலை (சக்தி) விருப்பாற்றல் (இச்சா சக்தி),அறி வாற்றல் (ஞான சக்தி), வினை யாற்றல் (கிரியா சக்தி), என மூன் க வருந்தும், மேலும் தொண்டாக (ஒன்பதாக) விரித்தும், ஐம்ப தாகப் பெருக்கியும் ; மாயை (மாயா, மோஹினீ), காலம், ஊழ் (நியதி), கலை, அறிவம் (வித்தை ), விழைவு (அராகம்), ஆதன் (புருஷ ) என் னும் ஏழும் அறிவ மெய்ப் பொருள் (வித்யா தத்வம்) என்றும், அவற்றை இறைவன் இPL (அனந்தன்) என்னும் வாலறிவன் வாயிலாகக் கருமிய (காரியப் படுத்துவா னென்றும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/117&oldid=1429697" இலிருந்து மீள்விக்கப்பட்டது