பக்கம்:தமிழர் மதம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககம் தமிழர் மதம் சிறு தெய்வ வணக்கம் சிறு தெய்வங்களையே வழுத்தும் வேத மந்திரங்களைக் கோவில்களில் ஓதுவிப்பதும், மழை வேண்டும்போது வாரண மன்றாட்டை (வருண ஜபத்தை)ச் செய்விப்பதும், மனை கட்டும் போது வாஸ்து புருஷன்)' என்னும் மனைத் தெய்வத்தை வணங்குவதும், பெருந் தேவ வழிபாட்டிற்கு மாறான சிறு தெய்வ வணக்கமாம். கடவுட்பெய ரிழிபு எங்கும் நிறைந்து எண்ணிற்கும் எட்டாது எல்லாவற்றை யுங் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய கடவுட் பெயரை, பெருந் தேவ மதத்தில் ஆள்வதும் பொருந்தா திருக்கையில், சிறுதெய் வங்கட்கும் முனிவர்க்கும் துறவியர்க்கும் குருக்கட்கும் பிராம ணர்க்கும் முறையே ஆண்டதும் பன்மையில் வழங்கியதும், கட வுட்பெய ரிழிபாம். பல்தெய்வ வணக்கம் உண்மைத் துறவியரும் பெரும் புலவரும் சிறந்த இறையடி யாரும் ஒரு பெருமட நிறுவனருமான குமர குருபர அடிகளும், தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநா யகன் , திருமால், சிவ பெருமான், (சித்தி விநாயகன்),முருகன், நான் முகன், தேவர் கோன், திருமகள் , கலைமகள் , காளி, எழு மாதர், முப்பத்து மூவர் என்னுந் தெய்வங்களையும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், வினை தீர்த்தான் (வைத்திய நாதன்), தையல் நாயகி, (கற்பக விநாயகன்), நான் முகன், தேவர் கோன், திருமகள், கலைமகள் , எழுமாதர், முப்பத்து முக்கோடி தேவர் என்னும் தெய்வங்களையும் வணங்கி யிருத்தல். (உ) ஆரிய மேம்பாடு குல வுயர்த்த ம் கண்ண பிரான் பாரதப் போர் தொடங்கு முன் அருச்சு னலுக்கு அறிவுறுத்திய செவியறிவுறூஉவாக, கடைக்கழகக் காலத்தில் ஒரு வலக்காரப் பிராமணனாற் கட்டி வரையப்பட்ட பகவற் கீதை என்னும் சமற்கிருதப் பனுவலில், பிராமணர் சத் திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணத்தார்க்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/126&oldid=1429706" இலிருந்து மீள்விக்கப்பட்டது