பக்கம்:தமிழர் மதம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் பெற்றிருத்தல் வேண்டும். மந்திர மாமலை மகேந்திர வெற் பன் என்னும் திருவாசகத் தொடரில் (உ! 500) மாணிக்க வாசகர் குறித்துள்ள மலை, கஞ்சம் மாவட்ட மலையே யென்று, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி தன் இயல்பிற் கேற்பக் குறித்துள்ளது: உ, தமிழ்நாட்டுச் சிவ மடங்கள் இன்று எல்லாத் துறையிலும் ஆரியத்தைப் போற்றி வரு வன, தமிழ்நாட்டுச் சிவ மடங்களே. இவற்றுள் குன்றக்குடி மடம் ஒன்றே விலக்காகும். மடத் தலைவரான தம்பிரான் மாரும் அவர் மாணவராகிய குட்டித் தம்பிரான் மாரும், துறவியர் எனச் சொல்லப் படுகின் றனர். ஆயின், தமிழத் துறவு முறைக் கேற்ற நிலைமைகள் அவர் மடங்களில் இல்லை. நால் 'வகை வெள்ளாளரே தம்பிரான்மா பாதற் குரியவர் என்பதும், உண்டி வகையிற் பிராமணர்க்குத் தனிச் சிறப்பும், மொழித் துறையிற் சமற்கிருதத்திற்கே முத லிடங் கொடுத்தலும், கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண ரையே பயிற்றுவதும், திருக் கோவில் வழிபாட்டில் வேத மந்தி ரங்கன ஓதுவிப்பதும், முற்றும் ஆரியச் சார்பான பழக்க வழக் கங்களாம். அணிகளை யணிவதும் உருவ வணக்கஞ் செய்வதும், உயரிய துறவு நிலைக் குரியவை யல்ல. - மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற. (குறள், ச). மற்றுத் தொடர்ப்பா டெவன் கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகை. (சைடு). “சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்து விட்டோர் இல்லிலும் அன்பரிடத்திலும் இசனிருக்குமிடம் கல்லிழுஞ் செம்பீலு மோவிருப் பான் எங்கள் கண்ணுதலே. 23 (பட்டினத்தார் பாடல்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/145&oldid=1429645" இலிருந்து மீள்விக்கப்பட்டது