பக்கம்:தமிழர் மதம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் "வேதச் சுருதி என்றது, நீண்ட கால ஆரிய விளம்பரத்தினால் அடிப்பட்ட வழக்குப் பற்றியது. இல்லறத்தாரான அடியார் நிலைமை வேறு; துறவு பூண்ட அறிவர் நிலைமை வேறு. திருவாவடுதுறை மடம் ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழி யாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், இருமொழியும் நிகரென்னும் இதற் கையம் உளதேயோ என்று பாடிய மாதவச் சிவஞான முனி வர் தொடர்பாலும்; சோறு என்னும் தூய தமிழ்ச் சொல்லைச் சொன்ன தற்காக ஒரு புலவரை யடித்த குட்டித் தம்பிரானை, பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சியாலும், திருவாவடு துறை மடம் சிறப்புற்றதே. ஆயினும், தமிழைப் போதிய அளவு போற்றதது வருந்தத் தக்கதே. ' தருமபுர மடம் கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண மாணவரையே இல வச ஊணுடையுறையுள் அளித்து ஆரிய மந்திரங்களிற் பயிற்று வதும், வினை தீர்த்தான் (வைத்தீசுவரன்) கோவிற் கும்ப முழுக்கு விழாவிற்கு, ஒரு மாதக் காலமாக நூற்றுக் கணக்கான வேதியரைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்ததும், ஆரி யத்தை நிலைநாட்டும் வருணாஸ்ரம சந்திரிகை', 'சித்தாந்த சைவ வினா விடை', 'சித்தாந்தத் தெளிவியல்' முதலிய பல பொத்தகங்களை வெளியிட்டு வருவதும், தமிழ மாணவரைத் தாழ்வாக நடத்தியதும், பிறவும், ஆரியம் தருமை மடத்தில் அடைக்கலம் புகுந்தது மட்டுமன்றித் தலை விரித்தும் ஆடுகின் றது என்னுமா றுள்ளன. முந்திய தம்பிரான் ஒருவர் சமற்கிருதத் திற் கையெழுத்திடுவதே வழக்கம் என்றும் சொல்லப்படுகின்றது. குண்டாசுர னென்னும் ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக் கொரித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவ னது இறகை யணிந் தருளினார். (பக். கூச) என்னும் கொக்கிற கணி விளக்கம் ஒன்றே, சித்தாந்த சைவ வினா விடை' யின் சிறப்பை விளக்கப் போதிய சான்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/146&oldid=1429646" இலிருந்து மீள்விக்கப்பட்டது