பக்கம்:தமிழர் மதம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கட் தமிழர் மதம் என்னும் பகுதிகள் , சித்தாந்தத் தெளிவியல்' எத்து கணக் கொண் முடிபு மயக்கியல் என்பதைத் தெரிவிக்கும். பூ வணிவு, தமிழ வாழ்க்கை முறைக்கும் சிவ நெறி யொழுக்கத்திற்கும் புறம்பான, பொருளற்ற ஆரிய வழக்கம். ஆதி சைவர் அல்லது முந்து சிவனியர் என்று சொல்லப்படத் தக்கவர், இதுவார், பண்டாரம், புலவர், குருக்கள் என்னும் வகுப்புக்களைச் சேர்ந்த தமிழப் பூசகரே. வேதத்திற்கும் சிவ நெறிக்கும் யாதொரு தொடர்பு மில்லை. - எழுத்து சொல் சொற்றொடர் என்பவற்றின் இயல்பு முன் னரே விளக்கப்பட்டது. மொழித் துறை பற்றிய ஆரியக் கொள்கை அறியாமையின் விளைவாகும். சிவநெறி தோன்றிய மொழி தமிழாதலால், எழுத் தெனப் படுவன் முப்பதே. பல் வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே, ஆரி யக் கொள்கைகள் சிவனியக் கொண் முடியிற் கலந்து விட்டத் னால், ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகட்குப் பின் தோன்றிய திருமூலர், அவற்றை அங்கனமே மேற்கொண்டு விட்டார். திருப்பனந்தாள் மடம் திருப்பனந்தாள் மட. மூலவரான குமரகுருபரர், பல்லுயிர்த் தொகுதியும் பயன் கொண் டுய்கெனக் குடிலை என்னும் தடவயல் தாப்பண் அருள்வித் திட்டுக் கருணை நீர் பாய்ச்சி வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை போன்று 'பண்டார மும்மணிக் கோவை'யிற் பாடியிருப்பதே, வேதம் பற்றி வழிவழித் தமிழரிடை வழங்கி வந்த குருட்டு நம்பிக் கையைக் காட்டும். திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத் தவத் திருச் சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில், ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள் , மகிழ்ச்சியொடு திரும்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/148&oldid=1429648" இலிருந்து மீள்விக்கப்பட்டது