பக்கம்:தமிழர் மதம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

IV வருநிலை யியல் க. திருக் கோவில் தமிழ் வழிபாடு கிறித்தவம் கி. பி. 1-ஆம் நூற்றாண்டு உரோம நகரத்தி னின்று பிரித்தானுக்குட் புகுத்தப்பட்டது. அதைப் புகுத்தியவர் மறைமொழி இலத்தீனமா யிருந்த தனால், கோவில் வழிபாடு அம் மொழியிலேயே நடைபெற்று வந்தது. ஆயின், கசு ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லுத்தர் என்னும் செருமானியர், போப் பாண்டவரின் அதிகாரத்தை யெதிர்த்துப் பெருங் கிளர்ச்சி செய்து சீர்திருத்தத்தை யேற்படுத்திய பின் , எல்லா நாடுகளிலு முள்ள சீர் திருத்தக் கிறித்தவக் கோவில்களில், அவ்வத் நாட் டுத் தாய்மொழியிலேயே வழிபாடு நடந்து வருகின்றது. இங்ங னம், ஐரோப்பியரும் ஆங்கிலரும், தம் உரிமை யுணர்ச்சியால், அயல் நாட்டினின்று அயன் மொழி வாயிலாக வந்த மதத்தை யும், தம் தாய்மொழி மதமாக மாற்றிக் கொண்டனர். தமிழரோ, தமிழ் நாட்டில் தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட மத வழிபாட்டை, ஒருபோதும் வழக்கில் இல்லாத, ஒருவர்க்கும் தெரியாத அயல் நாட்டு இலக்கிய மொழியில் நடைபெறுவித்து, செவிடர் போல் நின்று மீள்கின்றனர். சிவனியமும் மாலியமும் தூய தமிழ மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவன் அருமை மக்கள் தெஞ்சு கலந்து நேரடியாய்ப் பேசி இன்புற முடியாவாறு, இடையில் ஓர் அய லான் நின்று தடுத்து, அவர்கள் ' கொண்டு வந்த தின்பண்டங் களையும் தானே வாங்கிக் கொடுத்து, அவர்கள் தந்தையைப் போற்றிப் புகழ்வது போலும், தந்தை அவர்களை வாழ்த்துவது போலும், தானே மனப்பாடஞ் செய்து கொண்டனவும் அவர்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/155&oldid=1429656" இலிருந்து மீள்விக்கப்பட்டது