பக்கம்:தமிழர் மதம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசா தமிழர் மதம் குப் பொருள் தெரியாதனவுமான சில தொடர்களைச் சொல்லி, அதன்பின் அவர்களே விலகிக் கொள்ளுமாறு செய்வது போல், கோவிலிலுள்ள பரமத் திருத் தந்தையும் அருட் கடலுமான இறைவனுருவிற்கு, தமிழர் தாமே தம் அன்பார்ந்த நெஞ்சு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழி பட்டுப் படைத்து, பேரின்பப் பெரு மகிழ்ச்சியைப் பெற முடியா வாறு, வட நாட்டினின்று வந்த பிராமணன் இடை நின்று, படைப்புத் தேங்காயை வாங்கித் தானே யுடைத்து, தமிழர்க் கத் தெரியாத, தனக்குத் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப் போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்தி லும் ( Bank) வரியகத்திலும் பணஞ் செலுத்தியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை ஏமாற்றும் துணிச்சலுமான தீச் செயலாம்! ஆங்கிலப் பட்டக் கல்வியரும் அறிவியல் ஆராய்ச்சியாளரும் இதற்கு இணங்கி இருப்பது, எத்துணை இழி தகவான அடிமைத் தனமாம்! தமிழே திரவிடத்தாயும் ஆரிய மூலமு மாகும் என்னும் உண்மை , அண்ணிய காலத்திலேயே உலகறிய நாட்டப் படும். அதன் பிறகேனும், தமிழர் இருவகைச் சடங்குகளையும் கோவில் வழிபாட்டையும் தமிழிலேயே நடைபெறச் செய்தல் வேண்டும். பொதுக் கூட்டங்களில், அவைத் தலைவர் அம்மையப்பன் திருவடி போற்றி!' என்றே ஒலிக்க. அவையினர் 'அரகர அர வர) மாதேவா!' என்று ஆர்ப்பரிக்க. உ. பல் வகுப்புக் கோவிற் பூசகர் பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, தமிழ்ப் பற்று, தெய்வ நம் பிக்கை , புலான் மறுத் வகைத் தகுதியும் உள்ளவரை, எல்லா வகுப்பினின்றும் பூத சக ராகத் தெரிந்தெடுத்துப் பணி யாற்றுவித்தல் வேண்டும். இதற்கு மா யிருப்பவரை அரசு தண்டித்தலும் வேண்டும். க.. வழிபாட்டில் வீண் செலவு நிறுத்தம் கோவில்களிற் படைக்கப்படும் உணவுப் பொருட்கள், வழி படுவார்க்கும் பூசகர்க்கும் இரப்போர்க்கும் ஏழைகட்கும் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/156&oldid=1429657" இலிருந்து மீள்விக்கப்பட்டது