பக்கம்:தமிழர் மதம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருஅ தமிழர் மதம் வான், ஊம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நூன், தூம் என்று நகர மெய்ம் முதல் பெற்று, பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன. தூன், நூம் என்பன, வட திரவிடத்துள் ஒரு வகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தூம் என்று திரிந்து, இன்று அதன் வழிப்பட்ட இந்தியில் தூ, தும் என்று வழங்குகின்றன. தூ (நீ) என்னும் இந்தி வடிவமே, இயல்பாகவும் குறுகியும் மேலை ஆரிய மொழிகளில் வழங்குகின்றது. OE, OS.thu, OHG. du, ON. thi, Goth, thu,L. tu, E, thou. ஏன், ஏம் என்பவற்றிற்கும் தான் நாம் என்பவற்றிற்கும் இடையே, யான் யாம் என்பவை இருப்பது போன்றே, ஊன் ம் என்பவற்றிற்கும் நூன் நூம்' என்பவற்றிற்கும் இடையே, யூன் பூம் என்பனவும் இருந்தன. இவ் யகர அடியி னின்றே ஆங்கில சாகசனீயம் f (ye)அல் லது பூ (you) என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரைத் தோற்றி புள்ள து. மதிப்புறவு பற்றித் தும் என்னும் பன்மைப் பெயரை இத்தி யும், யூ என்னும் பன்மைப் பெயரை ஆங்கிலமும், ஒருமைக்கு வழங்குவது போல், வேத ஆரிய மும், தும் என்னும் பன்மைப் பெயரைத் த்வம் என்று திரித்து ஒருமைக்கும், யுவாம் பயம் என்னும் யகர வடிப் பெயர்களை முறையே' இருமை பன்மைக் கும், வழங்கிற்றுப் போலும். ஆகவே, நூம் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரின் திரிபே, இந்திய ஆரியத்தி லுள்ள த்வம் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் என்று கொள்ளப்படும். அஸ் என்னும் சொல் வரலாற்றைக் கைலாஸ என்னும் சொல் வரலாற்றிற் காண்க. (பக். அசு). சமற்கிருத முன்னிலை யொருமை திகழ்கால வினையீறு ஸி', அஸ் என்னும் வினை இதனொடு புணரும் போது இறு கெட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/174&oldid=1429436" இலிருந்து மீள்விக்கப்பட்டது