தமிழர் மதம் மதி-மதிப்பு-க. அளவிடுகை. உ.பொருட் படுத்துகை, கண்ணியப் படுத்துகை. "உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார்’’ (தேவா. க0கச:எ). ௩. கருத்து. "மண்ணுல காளு மதிப்பை யொழித்தே (பிரமோத்.அ:கூகூ). ச.தோராயம். ரு. கண்ணியம். தெ.மதிம்பு. உ மதி - மதம்-க.பெரிதாக மதிப்பது. உ, கருத்து. ௩.கொள்கை. ஈ.நெறிமுறை .ரு. சமயம். "தத்த மதங்களே யமைவதாக" (திருவாச.ச : ருஉ). வ. மத (mata). மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தி னின்று திரிப்பர். மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது. கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச் சொல்லும், மத்து என்னும் வடிவினின்றே திரிந்திருத்தலை நோக்குக. முத்து-- மொத்து - மத்து -மொத்தையாக விருக்கும் கடைகருவி. மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல், மத்தி- மதி. மதித்தல் - க. கடைதல், ‘மந்தரங் கொடு மதித்த நான் (சேதுபு.சங்கர.உ0). உ. கடை தல் போல் விரலா லழுத்தி மசி யச் செய்தல்.. மதி-மசி. மசிதல்-கடைந்தது போற் களியாதல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக. மத்து என்னும் பெயரை மந்த (mantha) என்றும், மத்தித் தல் என்னும் வினையை மத் (math) என்றும், சமற்கிருதத்தில் திரித்திருக்கின்றனர். இவற்றிற்கு வேர் தமிழிலேயே யன்றி வடமொழியி லில்லை. அளத்தற் பொருள் குறித்த mete என்னும் ஆங்கில வினைச் சொல் கவனிக்கத் தக்கது. E.mete (to mesure), OE, OS metan ON meta, Goth. mitan, OHG mezzan. E. meter person or thing that measures. Metron (measure) என்னும் கிரேக்கச் சொல் மாத்திரை என்பதன் திரிபு, மா-மாத் திரம் - மாத்திரை -வ. மாத்ரா. மாத்தல் என்னும் வினை தமிழில் வழக்கற்றது.
பக்கம்:தமிழர் மதம்.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
