பக்கம்:தமிழர் மதம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசஅ தமிழர் மதம் 'திருத் தொண்டத் தொகை' பாடிய சுந்தர மூர்த்தி நாய னார், "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கி யிருக்கவே வேண்டிய தில்லை. தில்லை வாழந் தணர் பிராமணரேயன்றித் தமிழ் முறைப்படி அந்தணரு மில்லர்; அவருள் ஒருவரேனும் செயற்கரிய பத்திச் செயல் செய்தது மில்லை. மூவேந்தரும், சிறப்பாகச் சோழ வேத்தர், விட்ட மானி பங்களையும் இட்ட காணிக்கைகளையுங் கொண்டு, ஒரே கோயி வில் மூவாயிரவர் இருந்து உண்டு கொழுத்துச் சோம்பேறித் தன மாய் வாழ்த்து வந்தவர். பொன்னம்பலப் பூசகரைப் போற்றுவ தெனின், வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலிய ஏனை யம்பலப் பூசகரையும் போற்றுதல் வேண்டும். அது பொருந்தாக்கால், பொன்னம்பலப் பூசகரைப் போற்றுதலும் பொருந்தாது. கோவில் வழிபாடு அதற்குத் தகுதியுடைய எல்லாக் குலத் தாரும் செய்யலாம், செய்விக்கலாம். தமிழ் நாட்டில் தமிழரே தமிழில் மட்டும் செய்வித்தல் வேண்டும். இங்கனமே ஆரியர் வரு முன் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக இருந்து வந்த ஆரிய அடிமைத் தனத் தினால், அடிமைத் தனத்திலேயே பிறந்து அடிமைத்தனத் திலேயே வளர்த்து, அடிமைத் தனமே எ லும் புங் குரு தியுமாக ஊறிப் போன தமிழரே பலர் தமிழ் வழிபாட்டை எதிர்க்கின் றனர். இதனால், தமிழ் வழிபாட்டையும் தமிழர் பூசக ராவதை யும் பிராமணர் வன்மையாக எதிர்க்கின்றனர். சிவகோசரி யாரின் சமற்கிருத வழிபாட்டினும், கண்ணப்பனாரின் தமிழ் வழி பாடே சிவபெருமானுக்குச் சிறந்ததும் உகந்ததுமா யிருந்ததை பறித்தும், இரு சாராரும் உணர்கின்றிலர், ஏனை நாடுகளின் நடப்பையும் இக்கால உரிமை வேட்கையையும் நோக்குகின் றிலர். ஆசிய முறைப்படி நோக்கினும், பிராமணர் இன்று ஊர் காவல் துறையிலும் படைத் துறையிலும் ஆள் வினைத் துறை யிலும் சேர்ந்து சத்திரியராயும், உழவுத் தொழில் செய்தும் உண் டிச் சாலை வைத்தும் வாணிகம் மேற்கொண்டும் வைசியராயும் கைத் தொழிலும் ஏவலும் செய்து சூத்திரராயும், மாறியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/184&oldid=1429426" இலிருந்து மீள்விக்கப்பட்டது