முன்னுரை "எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தா அ னாட்டித் தனது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படா அன் தன்மதங் கொளலே. என்னும் நன்னூல் நூற்பாவினின்று (கக), ஒரு பொருள் அல்லது நெறிமுறை (principle) இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றதும் இவ்வகையிலேயே என்றும், அறிந்து கொள்க. தெய்வம் உண்மை யின்மை, தெய்வத்தின் தன்மை, தெய் வத்தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மை யின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வுநிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர் மதித்துக்கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப் படுவதாகும். தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது. தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லை யென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப் பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப் பற்பல திறத் தனவா யுள்ளன. உ.சமயம் என்னும் சொல் வரலாறு மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளன வாயினும், தம்முள் நுண் பொருள்வேறுபா டுடையன. ஒருதெய் வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறை வனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமை வது சமயம். ஆகவே, மதத்தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.
பக்கம்:தமிழர் மதம்.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
