பக்கம்:தமிழர் மதம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்>>என்னும் உண் மையை யுணர்ந்து, மாந்த ரெல்லாரும் கடவுளின் மக்களான உடன் பிறப் பென்று கருதி, 'யாதும் ஊரே யாவருங் கேளிர்”” என்று அன்பொடு கூடி வாழ்வதற்கே மதம் ஏற்பட் டது. ஆயின், மாந்தர் தம் மனம் போனவாறு மதத்தைத் திரித்து, தம்மொடு மாறுபட்ட கருத்தினரைப் பகைத்து அவரி னின்று பிரிந்து போவதும் அவரொடு பொருவதும்,வெறி யான மதத்தின் விளைவே யன்றி நெறியான மதத்தின் விளை வன்று. பன்னூற்றாண்டு கூடி வாழ்ந்த இந்தியரும் பாக்கித் தானியரும், பகைவராய்ப் பிரிந்து போனமைக்கு, மதவெறியே கரணியம். கஅச மக்கள் அகக் கரண வளர்ச்சிக் கேற்றவாறு, மதம் முந் நிலைப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்த நிலையான கடவுட் சமயத்தைக் கடைப் பிடிப்பின், கோவில் குளமோ, உருவ வழி பாடோ தேவையில்லை. அதனால், பால் நெய் முதலியன பாழாவதும் அரசிறையான பொதுப் பணச் செலவும் ஏற்படா. உருவ வழிபாட்டை விரும்பியவரும், தனிப் பட்டவராகவோ பலர் கூடியோ, வீண் செலவு செய்யாது வழிபட்டு, விடுமுறை நாளிலும் வேலையில்லா நாளிலும் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விழாக் கொண்டாடி,பிறரைப் பகைக்கா திருப்பின், அதனாலுங் கேடில்லை.ஆகவே,இவ் விரு வகையாலும்,மதத்தால் மக்கள் முன்னேற்றத்திற்குத் தடை யில்லை யென்பது பெறப் படுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், மக்கள் முன்னேற் றத்திற்கு முட்டுக் கட்டையா யிருப்பது, ஆரியத்தா லேற்பட்ட பிறவிக் குலப் பிரிவினையே யன்றி வேறன்று. இது இந்தியா விற்கே சிறப்பான குமுகாயக் கொடு நோய். பிராமணன் தன்னை நிலத் தேவ னென்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, மதத் துறையுட் புகுந்து, கோவில் வழிபாட்டையும், இரு வகைச் சடங்கு நடாத்தத்தையும் தன் குலத் தொழிலாகக் கொண்டதனாலேயே, மக்களுடன் மதமுங் கெட்ட தன்றிக் கடவுள் நம்பிக்கையா லன்று. இந் நிலைமை என்றும் நிலைத்தற் பொருட்டே, தமிழருள் துப்புரவில் உயர்ந் தவன் வீட்டிலும் தான் தண்ணீருங் குடிப்பதில்லை யென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/200&oldid=1429359" இலிருந்து மீள்விக்கப்பட்டது