பக்கம்:தமிழர் மதம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கஅக தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி லுள்ளனர். கை வரையும் வேறுபட் டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலே யாகும். (எ) 'கடவுளை நம்பினோர் கைவிடப் படார். என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது. (அ) உடல் நலம், மன நலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல், (கூ) பஞ்சம், கொள்ளை நோய், பெரு வெள்ளம், நில நடுக் கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல். கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள் (க) கடவுள் புறக் கண்ணிற்குப் புலனாவ தில்லை. (உ) ஒன்றே டொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உல கில் வழங்கி வருகின்றன. நல்லோர் பலர், வறுமை, நோய், பிறரால் துன்பம் முதலியவற்றால் வருத்திக் குறுவாழ்க்கைய ராய்ச் சாக, தீயோர் பலர் எல்லா வகையிலும் இன்புற்று நீடு வாழ் கின்றனர். (ச) பல அஃறிணை உயிரினங்கள் பிறவற்றைக் கொன்று தின் பனவாகவே படைக்கப் பட்டுள்ளன. - (ரு) சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவ தில்லை. இங்கனம், கடவுள் உண்டென்பதற்கும் இல்லை யென்பதற் கும் காட்டப்படும் சான்றுகளுள் உண் டென்பதற் குரியவையே மிகுந்தும் வலிமை யுள்ளன வாகவும் இருக்கின்றன. காட்சி பளவை போன்றே கருத்தளவையும் உண்மை யறியும் வழி யாகும். கடவுள் எங்கும் நிறைந்து ஆவி வடிவி லிருப்பதால், அவரை ஒருவனும் புறக் கண்ணுற் காண முடியாது. முரண்பட்ட மதங்கள் மாந்தர் படைப்பு. நல்லோர்க்கு மறுமையில் நல் வாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/205&oldid=1429364" இலிருந்து மீள்விக்கப்பட்டது