பக்கம்:தமிழர் மதம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் தாழ்ந்த இனத்தினின்று உயர்த்த இனம் படிமுறை யாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரி யான ஒற்றைப் புரையன் (unioollular being) எங்கனம் தானே தோன்றும்?சடத்தினின்று சித்துத் தோன்றுமோ?தோன்றதே! ஆதலால், திரிபாக்கக் கொள்பு (Evolution theory ) தவறென்றே கொள்ள வேண்டி யுள்ளது. இனி, கதிரவனி னின்று ஞாலம் வீழ்ந்த தெனின், கதிரவன் எ தினின்று வீழ்ந்தது? இக் கொள் பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவிய லாராய்ச்சியாளர் இயற்கையி லுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெரு மையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறி விடுவது போல், தனக்கு நுண் மதி யளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்ற தன்றே! கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றான் தொழாஅர் எனின். 23 "மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே” (திருமந். உஉடுக). காணப் பட்ட பொருள்களைப் பற்றியே கருத்து வேறுபா டிருக்கும் போது, காணப் படாத கடவுளையும் மறுமையையும் பற்றிக் கருத்து வேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால், கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரையொருவர் குறை கூறுதும் வெறுக்காதும், உயர்திணைக் குரிய உடன் பிறப்பன்பு பூண் டொழுகல் வேண்டும். கடவுள் ஒருவரே யாதலால், கடவுள் மதத்தாரும் பல்வேறு கொள்கை கொண்டிருப்பினும், பொது வாழ்வில் ஒரு தந்தை மக்கள் போல் ஒன்றுபடல் வேண்டும். மரக்கறி யுணவே சிறந்த தாயினும், புலாலுண்ணா அஃறிணை யுயிரினங்களும் புலான் மறுத்த மக்களும், ஓரறி வுயிர்க் கொலை செய்தே உண்ண வேண்டி இருப்பதனாலும், கண்ணப்பனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/208&oldid=1429367" இலிருந்து மீள்விக்கப்பட்டது