பக்கம்:தமிழர் மதம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ரு வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை "ஸமய> என்று திரித்தும், ஸம்+அய என்று பிரித்தும், உடன்வருதல் (to come together) அல்லது ஒன்று சேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும், "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள். ௩அo) என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ்வடசொல் தென்சொற் றிரிபேயாதல் காண்க. ஸம்=உடன், கூட. அய-செல்கை, வருகை. 'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ-அய்-அயன- செல்வு. தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் கூடுதல், குவிதல். கும்-கும்மல். கும்--கும்பு-கும்பல். கும் - குமி -- குமியல். குமி-குவி- குவியல். கும்மல் - Leumulus - heap; cumulare = to heap up. E. cumulate, accumulate. கும் -கும்ம (நிகழ்கால வினையெச்சம்-Infinitive Mood)- கூட. கூடுதல் = ஒன்று சேர்தல், மிகுதல். கூட (to gather) என்னும் (நி. கா.) வினையெச்சம், உடன் (together, with) என்று பொருள்படும் போது, மூன்றாம் வேற் றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட் டாகவும் (prefix) ஆளப்படும். எ-டு: தந்தைகூட வந்தான் = தந்தையுடன் வந்தான். கூடப்பிறந்தான் - உடன்பிறந்தான். கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல், உ-அ திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும். "கமம் நிறைந் தியலும்." நிறைதல் = நிரம்புதல், மிகுதல், கூடுதல். (தொல்.உரி.ருஎ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/21&oldid=1428862" இலிருந்து மீள்விக்கப்பட்டது